பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் அம் மாநில பொதுப்பணித்துறையினர் ஷாஜ கான்பூர் முதல் புடான் வரை சாலை அமைத்து வருகிறார்கள். இந்த சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரரி டம், பாஜக எம்எல்ஏ ஜக்வீர் விக்ரம் சிங்கின் ஆத ரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் 5 சத விகித கமிஷன் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அந்த நபர்களுக்கு ஒப்பந்ததாரர் கமிஷன் தர வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ ஜக்வீர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் திடீரென புல்டோசரை கொண்டு வந்து, புதிதாக அமைக்கப்பட்ட சாலையை அரை கிலோமீட்டர் தூரத்திற்கு பெயர்த்து எடுத்துள்ளனர். இந்த செய்தி நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏவின் இந்த அராஜகத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.