states

img

அம்பேத்கர் குறிப்பிட்ட மக்கள் வேற... எங்கள் மக்கள் வேறே...!

  1. சினிமா தணிக்கை முறையில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்தி ருக்கிறேன். “மாற்றம்-முன்னேற்றம் எதிர்நீச்சல்” என்று அதற்குப் பெயர் சூட்டியிருக்கிறேன். தணிக்கை முடிந் ததும், ஆதார் கார்டு வாங்கிய இந்து சாமியார்கள் அந்தப் படத்தை மறு தணிக்கை செய்வார்கள். முஸ்லிம் மன்னர்களைப் பாராட்டிப் பேசும் வசனங்கள் இருந்தால் அந்தக் காட்சிகள் அறவே நீக்கப்படும்.  
  2.  மாதம் ஒரு முறை நான் மாண வர்களுடன் உரையாடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் என்னால் அனுமதிக்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமே இடம் உண்டு. “இந்தியா ஜனநாயகத்தின் தாய்” என்று அங்கே சொல்வேன். சென்ற கூட்டத்தில் ஒரு மாணவி “பிபிசி ஆவணப்படத்தில் உங்க ளைப் பற்றி.. ” என்று பேசத் தொடங்கி யதும் எனது மெய்க்காவலர்கள் அதிர்ந்து போனார்கள். பாய்ந்து வந்து அவரது வாயைப் பொத்தி வெளியே அழைத்துச் சென்றார்கள். காவலர்கள் வடிகட்டிய பிறகு இவர் எப்படி உள்ளே வந்தார் என்ற ரகசிய விசாரணை நடக்கும்.  
  3.  திருவள்ளுவர் சென்ற வழியில் நான் நடந்து செல்கிறேன். அவரது காலடித் தடங்கள் எனக்கு வழி காட்டுகின்றன. ஒரு புறம் பாரம்பரிய வழியில் வந்த மகான்களை வழிபட ஏற்பாடு செய்கிறேன். மறுபுறம் டிஜிட்டல் மயம், விண்வெளி ஆராய்ச் சிகள், பயணங்கள், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் என்று நாடு நவீன யுகத்தில் பீடு நடை போடுகிறது. “உள்ளே எந்த விவாதமும் அனுமதிக்கப்படாத போது, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் தேவையா?”என்று மக்கள் பத்திரிகையாளர்களிடம் ரகசியமா கக் கேட்கிறார்களாம்..!  H அடிக்கடி பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்தி பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலையிடம் எடுத்துச் சொன்னேன். மாநில அரசை வறுத்தெடுக்க பத்திரிகையாளர்கள் கூட்டம் அவசியம் என்று அவர் நினைக்கிறார். சிறிது காலம் பொறுத்து முடிவு செய்வோம். ஆர்.என்.ரவியை கொஞ்சம் விட்டுப் பிடித்தோம் இல்லியா, அது மாதிரின்னு வச்சுக்குங்களேன்..!  
  4.  எங்களுக்கெல்லாம் எப்போது வேலை கொடுப்பீர்கள்.. மாதச் செலவை சமாளிக்கும் விதத்தில் சம்பளம் எப்போது கிடைக்கும்.. விலைவாசி எப்போது குறையும்.. எங்க கஷ்டமெல்லாம் எப்ப தீரும்னு சாதாரண மக்கள் கேட்கிறார்களாம். இந்த மாதம் அயோத்தியில் ராமர் கோவில் திறந்துருவோம். உங்க பிரச்சனைகளையெல்லாம் பக வான் ராமர்கிட்ட  சொல்லுங்கன்னு அவர்களுக்குச் சொல்ல விரும்பு கிறேன்..!  
  5. # எங்களது திட்டம் “விகாஸ்”..!  காங்கிரசின் திட்டம் “வினாஸ்”..! 2014-ஆம்  ஆண்டில் இந்தியா முழுதும் சுற்றிவந்து “விகாஸ்”னா என்னன்னு மக்களுக்குப் புரிய வச்சேன். மக்கள் ஏமாந்தாங்க.. இப்ப வினாஸே பரவாயில்லைங்கற முடிவுக்கு அவங்க வந்துருக்காப்பல தெரியுது. அதை அப்படியே விட்டுற முடியுமா? 2047-லே இந்தியா வல்ல ரசாகப் போகுது.. பாகிஸ்தானை மறந் துடாதீங்கன்னு பட்டாஸ் கொளுத்திப் போட வேண்டியதுதான்.. !  
  6.  முந்தைய ஆட்சியிலே சுபாஷ் சந்திரபோஸ், வீர் சாவர்க்கர் எல்லாம் புறக்கணிக்கப்பட்டாங்க. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. என்னோட ஆட்சியிலே எல்லாம் மாறிட்டு வருது. அதையெல்லாம் நல்லாக் கவனிங்கன்னு மக்கள் கிட்ட சொல்லிட்டு வறேன். கவனிக்க லைன்னா நான் வேற யுக்திக்குப் போயிடுவேன். அம்புட்டுதான்.. !  
  7.  இலங்கை, பாகிஸ்தான், பர்மா அதிபர்கள் பட்ட பாட்டை.. படற பாட்டை மக்கள் பார்க்கறாங்க. இந்தியா விலேயும் அந்த மாதிரி நிலைமை வரப் போவுதுன்னு எதிர்க்கட்சிகள் அவங்களைப் பயமுறுத்தறாங்க. இங்கே சங்பரிவாரத்தினர் இருக் கும்போது எங்களுக்கு என்ன கவலை..?
  8.  2023-24 நிதியாண்டிற்கான பண்டிகை நம்மைக் கடந்து சென்று விட்டது. பட்ஜெட்டைத்தான் சொல் றேன். ஏழை, நடுத்தர மக்களின் சுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு எல்லாம் எங்களுக்குத் தெரி யாத ரகசியம் அல்ல. அவற்றைக் கவனிப்பதா, எங்களுடைய ஆப்த நண்பர்களான அதானி-அம்பானி வகையறாக்ளைக் கவனிப்பதா? “இந்திய மக்களாகிய நாம்..” என்று அம்பேத்கர் குறிப்பிட்ட மக்கள் வேற.. எங்களுடைய மனதில் உள்ள மக்கள் வேறே.. டீக் ஹை..?

-ராஜகுரு