states

img

ஹிண்டன்பர்க்கால் கீழே இறங்கிய அதானி; மீண்டும் முதலிடத்தில் அம்பானி!

ஹுரன் இந்தியா மற்றும் 360 ஒன்  வெல்த் ஆகிய  நிறுவனங்கள் இணைந்து கூட்டாக இந்திய பணக்காரர்  கள் பட்டியலை வெளியிட்டுள்  ளன. இதில் ரிலையன்ஸ் குழும  தலைவரும், பிரதமர் மோடி யின் நெருங்கிய நண்பருமான முகேஷ் அம்பானி ரூ.8.08 லட் சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 2014இல் ரூ.1.65 லட்சம் கோடி யாக இருந்த முகேஷ் அம்பானி யின் சொத்து மதிப்பு 9 ஆண்டு களில் 4 மடங்கு அதிகரித்துள் ளது.  பிரதமர் மோடியின் மற்  றொரு நெருங்கிய நண்பரும்,  அதானி குழுமத் தலைவரு மான கவுதம் அதானி 2-ஆம்  இடத்திற்கு தள்ளப்பட்டுள் ளார். பங்குச் சந்தை முறைகேடு  தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையால் கடும் சரிவை கண்ட கவுதம் அதானியின் சொத்து  மதிப்பு ரூ.4.74 லட்சம் கோடி யாக உள்ளது.  கொரோனா தடுப்பூசியை விற்ற ரூ.2.78 லட்சம் கோடி யுடன் சீரம் நிறுவன தலைவர் சைரஸ் அதார் பூனவல்லா 3-ஆம் இடத்திலும், ஹெச்சிஎல்  நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.2.29  லட்சம் கோடி சொத்து மதிப்பு டன் 4-ஆம் இடத்திலும் உள்ள னர். கோபிசந்த் இந்துஜா ரூ. 1.76 லட்சம் கோடியுடன் 5-ஆம் இடத்திலும், சன் பார்மா தலை வர் திலீப் சங்வி ரூ.1.64 லட்சம் கோடியுடன் 6ஆம் இடத்தை யும் பெற்றுள்ளனர். லட்சுமி மிட்  டல் ரூ.1.62 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 7-ஆம் இடத்திலும், ராதாகிஷன் தமனி  ரூ. 1.44 லட்சம் கோடியுடன் 8-ஆம் இடத்திலும், ஆதித்யா  பிர்லா குழும தலைவர் குமார்  மங்கலம் பிர்லா 9-ஆம் இடத்தி லும், தொழிலதிபர் நீரஜ் பஜாஜ்  10-ஆம் இடத்திலும் உள்ள னர்.