மகாராஷ்டிராவில் பெண்களுக்கு 50% சலுகை
மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மார்ச் 17 முதல் அனைத்துப் பேருந்துகளி லும் பெண்களுக்கு 50% டிக்கெட்டுகளில் சலுகை வழங் கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘மகிளா சம்மன் யோஜனா’ திட்டத்தின் கீழ் இந்த சலுகை வழங்கப்படும்; மாநில அரசு சலுகைத் தொகையை அரசுக்கு சொந்தமான போக்குவரத்து சேவைக்கு திருப்பிச் செலுத்தும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி பட்ஜெட் தொடரின் முதல் நாளில் அமளி
தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையன்று கடும் அமளியில் தொடங்கியது. மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் போராட்டம் நடத்தினர். சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், மூன்று பாஜக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
இந்தியாவில் கோவிட்-19 : 5,000ஐத் தாண்டியது
இந்தியாவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 796 கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 109 நாட்களுக்குப் பிறகு 5,000 ஐத் தாண்டியுள்ளது என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
தில்லியில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை கூறுகையில், நகரத்தில் அதிக காய்ச்சல் பாதிப்பு இல்லை, ஆனால் முன்கூட்டியே பரிசோதனை செய்யுமாறு அரசு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆறு மாநிலங்களுக்கு கோவிட் 19 தொடர்பான ஆலோசனையை ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ளது ஆனால் தில்லி பட்டியலில் இல்லை என்று அவர் கூறினார். மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் கூறினார்.
தாயைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் காவல்
மும்பையின் லால்பாக் நகரில் தனது தாயை கொலை செய்து, உடல் உறுப்புகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் மார்ச் 20 வரை போலீஸ் காவலில் வைக் கப்பட்டார். வீணா பிரகாஷ் ஜெயின் என்ற பெண்மணி தான் கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டு, அவர் டிசம்பரில் கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்பெண்மணியின் மகள், கொல்லப்பட்டவரின் உடலின் துர்நாற்றத்தை மறைக்க 200 வாசனை திரவிய பாட்டில்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குடோன் இடிந்து விழுந்து 8 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் குளிர்பதன கிடங்கு கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலி யானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலையா? கொலையா? விசாரிக்க கோரிக்கை
பிப்ரவரி 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன் சோலங்கி யின் மரணம் கொலையா என விசாரிக்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சோலங்கி ஒரு தலித் என்பதை அறிந்ததும் அவரது சகாக்களால் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குடும் பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று தர்ஷனின் தந்தை கோரியுள்ளார்.
செகந்திராபாத்தில் பயங்கர தீ: 6 பேர் பலி
செகந்திராபாத்தில் உள்ள ஸ்வப்னாலோக் வளாகத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மூத்த போலீஸ் அதிகாரி சந்தன தீப்தி கூறுகையில், “தீ விபத்து ஏற்பட்ட போது அவர்கள் வளாகத்திற்குள் இருந்தனர். வெளியே எடுக்கப்பட்ட நேரத்தில், அவர்கள் ஆபத்தான நிலையில் இருந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர், எனினும் வழியிலேயே இறந்துவிட்டனர்” என்றார். ஏழு பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தில்லியில் திருநங்கைகளுக்காக 65 புதிய கழிவறைகள்
புதுதில்லி மாநகராட்சி (என்டிஎம்சி), திருநங்கை களுக்காக 65 புதிய கழிவறைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போ தைய நிலவரப்படி, தில்லியில் திருநங்கைகளுக்காக 12 கழிப்பறைகள் உள்ளன, அவற்றில் 11 செயல்படுகின்றன. “அடுத்த வாரத்திற்குள், கழிப்பறைகள் கட்டுவதற்கான டெண் டர் விடுவோம்,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பெங்களூரு மக்களுக்கு வேண்டுகோள்
காவிரி நீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பெங்க ளூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. “குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாரியத்தின் கீழ் 68 லாரி டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்,’’ என அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளில் 10,713 என்கவுண்ட்டர்கள்: உ.பி.யில் பயங்கரம்
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 10,713 என்கவுண்ட்டர்களில் 63 ‘குற்றவாளிகள்’ கொல்லப்பட்டனர் என்று பாஜக மாநில அரசு தெரிவித்துள் ளது. மீரட்டில் அதிகபட்சமாக 3,152 என் கவுண்ட்டர்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றவுடன், என்கவுண்ட்டர் கொலைகள் அவரது முன்னுரிமையாக மாறின”
கோவிட் பரவல்: 6 மாநிலங்களுக்கு அரசு கடிதம்
மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஆறு மாநிலங்களை, கோவிட் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இடர் மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் எப்போது? உமர் அப்துல்லா கேள்வி
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தினார். “திரிபுரா மற்றும் நாகா லாந்தில் தேர்தல்கள் நடந்தன. அடுத்த மாதம் கர்நாட காவில் தேர்தல் நடத்தப்படும். காஷ்மீரில் மட்டும் ஏன் நடத்த முடியாது?” என்று அப்துல்லா கேள்வி எழுப்பி னார். ”“படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தேர்தலை நடத்துவதற்கு பாஜக பயப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
சோஜி லா கணவாய் மீண்டும் திறப்பு
காஷ்மீரை லடாக்குடன் இணைக்கும் ஜோஜி லா கணவாய் (பாஸ்) ஜனவரி மாதம் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து மூடப்பட்டு 68 நாட்க ளுக்குப் பிறகு எல்லைச் சாலைகள் அமைப்பால் (பிஆர்ஓ) திறக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், 110 நாள் மூட லுக்குப் பிறகு இப்பாதை திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் அது 73 நாட்களுக்கு மூடப்பட்டது. தற்போது வாகனங்களின் சோதனை இயக்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.