ஹாலிவுட்,செப்.26- மே 2 முதல் ஐந்து மாத கால போராட் டங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் எழுத்தாளர்கள் ஹாலிவுட் ஸ்டுடியோ முத லாளிகளுடன் ஒரு தற்காலிக ஒப்பந்தத் தைப் ஏற்படுத்தியுள்ளனர்.செப்டம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை யில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க எழுத்தாளர் சங்கம் (WGA) அனைத்து ஒப்பந்தங்களிலும் கொள்கை அடிப்படையில் ஒரு உடன்பாடு எட்டி யுள்ளதாக அறிவித்தது.அமெரிக்க எழுத்தா ளர் சங்கம், இயக்கப்பட மற்றும் தொலைக் காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டணி (AMPTP) நடத்தி பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வரைவு வடிவில் மட்டுமே உள்ளதால் வேலைநிறுத்தம் முழுமையாக திரும்ப பெறப்படவில்லை. வரைவு இறுதி செய்யப்படும் வரை இன்னும் சில நாட்கள் போராட்டம் தொடரும் என்று கூறப் பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் வந்த பிறகு தொழிலாளர்களிடம் கொடுக்கப் பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போராட்டத்தை திரும்பப் பெறலாமா? தொடர வேண்டுமா? என வாக்கெடுப்பு நடத்தப் பட்ட பிறகே முடிவெடுக்கப்படும்.எனவே 2000 உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த போராட்டம் இறுதி கட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆயிரக்கணக் கான தொழிலாளர்களின் அடிப்படை உரி மைகளை நிலை நாட்டை முடியும் என்று தொழிற் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ள னர்.அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் இந்த 146 நாட்களும் நமது வலிகளை தாங்கிக்கொண்டு ஒற்றுமையுடனும் நம் சகோதர சகோதரிகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் போராடியதுமே இந்த வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிட்டனர்.அதே வேளையில் இது முடிவல்ல தொழிற்சங்கத்தின் போராட்டம் நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே, எனவே உடனடியாக “யாரும் வேலைக்குத் திரும்ப வேண்டாம்” என்று அறிவித்தனர். குறைந்தபட்ச ஊழியர்கள் இல்லாத தால் பணிச்சுமை, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப பயன்பாட்டை அதிகரித்தது,
இயல்பான தொலைக்காட்சி ஒளிபரப்பு களில் இருந்து இணைய வடிவிலான தன்மை (ஸ்ட்ரீமிங் தளங்களை) நோக்கிய திடீர் மாற்றம் எழுத்தாளர்களின் அடையா ளங்களை அழித்ததோடு மோசமான இழப்பை ஏற்படுத்தியது போராட்டத்தின் முக்கிய காரணங்கள்.செயற்கை நுண்ண றிவு தொழில் நுட்ப வருகைக்கு பிறகு ஆயி ரக்கணக்கான உள்ளடக்க எழுத்தாளர்க ளின் (content writers ) வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்களை பணி நீக்கம் செய்தன. 1960க்குப் பிறகு எழுத்தாளர்களும் நடி கர்களும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது இதுவே முதல் முறை. நடிகர் சங்கம் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களின் கூட்ட மைப்பு இதேபோல் வேலைநிறுத்தம் நடத் திய போது அமெரிக்க பொழுதுபோக்குத் துறை கிட்டத்தட்ட முழுமையாக முடங்கி யது. கலிபோர்னியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் 500 கோடி அமெரிக்க டாலர்களு க்கு மேல் இழப்பு ஏற்பட்டதோடு வேலை நிறுத்தம் காரணமாக முக்கிய தொலைக் காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்புகள் நிறுத் தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.