states

இன்ட்ராநாசில் பூஸ்டர் டோஸ் பரிசோதனைக்கு அனுமதி

புதுதில்லி, ஜன.28- பாரத் பயோடெக் நிறு வனத்தின் கோவாக்ஸின் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு இன்ட்ராநாசில் பூஸ்டர்டோஸின் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த ஒப்புதல் பெற்றுள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட் டாளர் ஜெனரல் வெள்ளியன்று மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு அனுமதி அளித்துள்ளார். நாட்டில் ஒன்பது இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படு கிறது. BBV154 என்ற நாசி தடுப்பூசி, நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில்  மூக்கில்  நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. கொரோனா  பரவு வதைத் தடுப்பதில் இன்ட்ரா நாசில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பாரத் பயோடெக் கூறியுள்ளது.

;