உ.பி. தேர்தலில் போட்டியிடும் அம் மாநில முதல்வர் ஆதித்ய நாத், கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் தனது வேட்புமனு தாக் கல் செய்துள்ளார். அந்த வேட்புமனுவில், தனக்கு 6 வங்கிக் கணக்குகள், 1 கோடியே 54 லட்சத்து 94 ஆயிரத்து 054 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், 20 தங்க நகை கள் மற்றும் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான சாம்சங் செல்போன் உள்ளது என்றும், இவைதவிர ரூ. 1 லட்சம் மதிப்பிலான கைத் துப்பாக்கி, ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான ரிவால்வர் ஆகியவை உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.