states

img

ரேசன் உணவு பாக்கெட்டுகளில் மோடி படம் போடத் தடை!

லக்னோ, ஜன.10- உத்தரப்பிரதேச ரேசன் கடைகளில் பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத் படம் பொறித்த உணவு பாக்கெட்டுகளை விநியோ கிக்க தடை விதிக்கப்பட்டுள் ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி துவங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்க ளாக நடைபெறும் என அறி விக்கப்பட்டதைத் தொட ர்ந்து ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேசன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஆதித்யநாத் படங் கள் அச்சிடப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகளை விநியோகிக்கக் கூடாது என உத்தரப் பிரதேச உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குப் பிறகு இது தொடர்பான உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் உணவுப் பாது காப்பு ஆணையர் சோரப் பாபு அனுப்பி வைத்துள்ளார். தடுப்பூசி சான்றிதழிலும் மோடி படம் நீக்கம் இதேபோல, தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களி லும் தடுப்பூசி செலுத்தியவர் களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலும் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட் டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சனிக் கிழமை இரவே இந்த மாற் றத்தை ஒன்றிய அரசின் சுகா தாரத்துறை அமைச்சகம் செய்துவிட்டதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி சான்றிதழிலும் மோடி படம் நீக்கம்

இதேபோல, தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களி லும் தடுப்பூசி செலுத்தியவர் களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலும் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட் டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சனிக் கிழமை இரவே இந்த மாற் றத்தை ஒன்றிய அரசின் சுகா தாரத்துறை அமைச்சகம் செய்துவிட்டதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன.