புதுதில்லி, ஏப். 27 - தில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இதனை நாட்டிற்கே முன்னுதாரணமான ஆட்சி எனக் கூறிவரும் ஆம் ஆத்மி கட்சியினர், அதற்கு ‘தில்லி மாடல்’ என்ற நாமகரணமும் சூட்டியுள்ள னர். குறிப்பாக, தில்லி பள்ளிகளை, ‘தில்லி மாடல் பள்ளிகள்’ என அடை யாளப்படுத்தத் துவங்கியுள்ளனர். அண்மையில் தலைநகர் தில்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சென்று அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டார். அப்போதிருந்து, ‘தில்லி மாடல் கல்வி முறை’ என்று ரொம்பவே கூவத் துவங்கி விட்டனர். இதையொட்டி, ஆம் ஆத்மி எம்எல்ஏ-வாக இருக்கும் அதிஷி சிங், அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பதிவிட் டார். அதில், “தில்லி கல்வி மாடலை ஆர்வமாக அறிந்துகொள்ள கேரள மாநில அரசும், தனது பிரதிநிதிகளை தில்லிக்கு அனுப்பியுள்ளது; தில்லி அரசு முறையான வரவேற்பை தந்து பள்ளிகளை அவர்களுக்கு காட்டியது” என்று புளகாங்கிதத்து டன் கூறியிருந்தார். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து கேரளா கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது.
அரசுப் பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு, கற்றல் சாதனங்களுடன், மாணவர் களுக்கு எளிமையான, இனிமை யான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறிருக்க, தில்லி மாடல் கல்வி யை கேரளா எதற்காக பின்பற்ற வேண்டும்? என்று பலர் சந்தேகங் களை எழுப்பினர். இந்நிலையில்தான், கேரள அரசு அதிகாரிகள் யாரும் தில்லி செல்லவும் இல்லை; தில்லி மாடல் கல்வி குறித்து பார்வையிடவும் இல்லை; ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி சிங் அப்பட்டமான பொய் சொல்கிறார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி சிங்-கின் டுவிட்டர் பக்கத்திலேயே பதிவிட்ட கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, “கேரள கல்வித்துறையானது, தில்லி மாடலை அறிந்து கொள்ள யாரை யும் தில்லிக்கு அனுப்பவில்லை. மாறாக, கடந்த மாதம் கேரள மாட லை அறிந்து கொள்ள தில்லி யிலிருந்துதான்
அதிகாரிகள் வந்திருந் தார்கள்.. அவர்களுக்கு உரிய உதவி யை கேரள அரசு செய்தது” என்று பதி லடி கொடுத்ததுடன், “எந்த கேரள அதி காரிகளை ஆம் ஆத்மி எம்எல்ஏ வர வேற்றார்? என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினார். டாக்டர் வி. சிவன்குட்டி கொடுத்த இந்த பதிலடி, ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி சிங்-கிற்கு மிகுந்த அவமானமாகி விட்டது. இதையடுத்து, நிலைமையைச் சமாளிக்கும் விதமாக, முன்பு கேரள அரசு அதிகாரிகள் வந்து பார்வை யிட்டதாக கூறிய அதிஷி சிங், “கேரளா சஹோதயா பள்ளிகள் அமைப்பின் உறுப்பினர் தினேஷ் பாபு மற்றும் சிபிஎஸ்இ வட்டார செயலாளர் விக்டர் ஆகியோர்தான் தில்லி மாடலை பார்வையிட்டவர்கள்” என்று புகைப்படம் ஒன்றைப் போட்டு பின்வாங்கியுள்ளார்.