ஜம்மு - காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது ஊரடங்கு
அமல் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவாக உள்ள மேராஜ் மாலிக் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி யினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் டோடா தொகு தியின் எம்எல்ஏவாகவும் சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராகவும் இருப்பவர் மேராஜ் மாலிக். இவர் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொது பாது காப்புச் சட்டத்தின்கீழ் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு - காஷ்மீர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித குற்றச்சா ட்டும் இல்லாமல் இந்தச் சட்டத்தின்கீழ் ஒருவரை பொது பாதுகாப்புக்கு பாதிப்பு உருவாக்கியதாக கருதி தடுப்புக்கா வலில் வைக்கலாம். இதையடுத்து டோடா பகுதியில் மேராஜின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 163 பிஎன்எஸ்எஸ் (144 சிஆர்பிசி) தடை சட்டத்தின் கீழ் அப்பகு தியில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டுள்ள முதல் சட்டப்பேரவை உறுப்பினர் மேராஜ் மாலிக் என கூறப்படுகிறது.