states

img

மூச்சு திணறும் தலைநகரம்

நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் குறைந்து வரும் நிலையில், சனியன்று வடக்கு தில்லி, துவாரகா, ஷாலிமார் பாக் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு (AQI) மிகமோசமான அளவில் 300 புள்ளிகளை கடந்தது. இதனால் தில்லி பகுதி பனிமூட்டம் படர்ந்த பகுதி போல காட்சியளித்தது. பண்டிகை சீசன் மற்றும் குளிர்காலம் நெருங்குவதால் காற்றின் தரம் மேலும் மோசமாக வாய்ப்புள்ளது என வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.