states

img

விமானப்படை விமானங்கள் விபத்து

புதுதில்லி, ஜன.28-  நடுவானில் பயிற்சியின்போது விமா னப்படை விமானங்கள் விபத்துக்குள் ளாகின. மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில்  விமானி ஒரு வர் பலியானார். மத்தியப்பிரதேச மாநிலம் குவாலிய ரில் இந்திய விமானப் படையின் விமா னத்தளம் உள்ளது. ஜனவரி 28 சனிக்கிழ மையன்று காலை விமானப் படைக்கு  சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்- 2000 வகை போர் விமானங்கள் நடு வானில் அதிவேகமாக பறந்து பயிற்சி யில் ஈடுபட்டிருந்தன. சுகோய்-30 போர் விமானத்தில் 2 விமானிகளும், மிராஜ்-2000 விமானத்தில் ஒரு விமானியும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானங்கள் விபத் துக்குள்ளாகியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது.  மத்தியப்பிரதேச மாநி லம் மொரேனா மாவட்டத்தில்  நிகழ்ந்த  இந்த விபத்தில் இந்திய விமானப் படை  விமானி ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த விபத்து குறித்த தகவலை இந்  திய விமானப் படை உறுதி செய்துள் ளது. இது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில், விபத்துக்கான கார ணம் குறித்து கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்  பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசுதோஸ் கூறுகையில், “குவாலியரில் இருந்து காலையில் புறப்பட்ட மிராஜ் மற்றும் சுகோய் விமானங்களில் மொத்தம் மூன்று விமானிகள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானி யின் உடல் பாகங்கள் கண்டறியப்பட் டுள்ளன,” என்று தெரிவித்தார்.  மேலும் அவர், “விமானங்கள் நடு வானில் மோதின என உறுதி செய்ய மறுத்து விட்டார். இந்திய விமானப் படையின் முழு விசாரணைக்குப் பிறகே விபத்து எப்படி நடந்தது என அறிய முடியும்,” என்றார். மத்தியப்பிரதேசம் - ராஜஸ்தான் எல்லையில் நடந்த இந்த விபத்தில் சிதைந்த விமானத்தின் சில பாகங்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் அருகே  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“விபத்துக்குள்ளானது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமா னம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு  காணப்படும் பாகங்களை வைத்து,  இது போர் விமானமா அல்லது சாதா ரண விமானமா என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை.” என்று பரத்பூர் டி.எஸ்.பி. கூறினார். விமான விபத்து தொடர்பாக பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதற்கட்ட தகவல்களை பாதுகாப்புத்  துறை அதிகாரிகள் மூலம் கேட்டு அறிந்து  கொண்டதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்  டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள் ளது.

;