states

img

ராஜஸ்தானில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பிகானேர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீதுங்கர்கர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கிரிதர்லால் மஹியா களமிறங்குகிறார். அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சத்தாசரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ரோட் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. கிரிதர்லால் மஹியாவிற்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பாதயாத்திரையாக பின்தொடர்ந்து வந்தனர். மஹியா தற்போது ஸ்ரீதுங்கர்கர் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.