ஒடிசா மாநிலத்தில் உள்ள நாடி கன் கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயதான சுஜாதா சேதி. நாடி கன் பகுதியில் அக்., 22 அன்று ஏற்பட்ட வன்முறையில் சுஜாதா சேதியின் தந்தை காயமடைந்தார். யாரும் உதவ முன்வராத நிலையில், தனது தந்தை யை கிராமத்தில் இருந்து 14 கி.மீ., தள்ளி யிருக்கும் மருத்துவமனைக்கு அவரது மூன்று சக்கர சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்றிருக்கிறார் சிறுமி சுஜாதா சேதி. அங்கு சிறுமியின் தந்தை யை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக பத்ராக்கில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவ மனைக்கு அழைத்துச் சொல்லும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மருத்துவமனையும் வாகன உதவி செய்யாத நிலையில், தொடர்ந்து காயமடைந்த தனது தந்தையை அங்கி ந்து 21 கி.மீ., தூரம் அதே மூன்று சக்கர சைக்கிளில் வைத்து ஓட்டிச் சென்று பத்ராக் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு மருத்துவர்கள் சுஜாதாவிடம், “அறுவைசிகிச்சை செய்யவேண்டும், இப்போது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைத்து வர வேண்டும்’ என்று சொல்லியுள்ளனர். இந்தச் சம்ப வம் அக்., 23 அன்று அரங்கேறியது. சுஜாதா சேதி தனது தந்தையை வீட் டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் மொஹாதப் சாக் என்ற இடத்தில் பத்தி ரிகையாளர்கள் பார்த்து விசாரித்த பின்னர் இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கேள் விப்பட்டதும், பத்ராக் சட்டமன்ற உறுப்பினர் சஞ்ஜிப் மல்லிக் மற்றும் முன்னாள் தாம்நகர் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் ஆகியோர் சம்பந் தப்பட்ட சிறுமியை அணுகி அவருக்கு தேவையான உதவிகளைச் செய்த னர். இது குறித்து சுஜாதா அளித்த பேட்டியில்,“தனியார் வாகனம் அமர்த்தி தந்தையை மருத்துவ மனைக்கு அழைத்து வரும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. ஆம்பு லன்ஸை அழைப்பதற்கு என்னிடம் மொபைல் போனும் இல்லை. அத னால், தந்தையின் மூன்று சக்கர சைக்கி ளில் வைத்து அவரை நான் மருத்துவ மனைக்கு அழைத்து வந்தேன்” என்றார்.