states

உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு

புதுதில்லி,மார்ச் 1- உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய  அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது.  இந்தநிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க  ஆபரேசன் கங்கா மூலம்  மீட்க நான்கு ஒன்றிய அமைச்சர்கள்  கொண்ட குழு உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இந்நிலையில், உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் இந்தியக்குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது எனவும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.