states

img

தில்லி அரசை கவிழ்க்க 7 எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய பா.ஜ.க.

தில்லியில் அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ-க்களிடம் தலா ரூ.25 கோடி தருவதாக பா.ஜ.க. பேரம் பேசியுள்ளதாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
"ஆபரேஷன் லோட்டஸ்" என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டிவருகிறது. முன்னதாக மகாராஷ்ட்டிரா, கோவா, கர்நாடகா, அருணாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேச உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி பாஜகவால் கவிழ்க்கப்பட்டது. இந்த நிலையில், தில்லியில் அரசையும் கவிழ்க்க பா.ஜ.க. பேரம் பேசியுள்ளதாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ-க்களிடம் தலா ரூ.25 கோடி தருவதாக பா.ஜ.க. பேரம் பேசியுள்ளதாகவும், 21 எம்.எல்.ஏ-க்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், மதுபான கொள்கை வழக்கில் அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்த பின்னர் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கப்படும் என்றும் 7 எம்.எல்.ஏ-க்களிடம் பாஜக தரப்பு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
 

;