புதுதில்லி,ஏப்.7- இந்திய எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால், எல்லை தாண்டிய ஊடுருவல்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டில் 34 ஊடுருவல்கள் நடந்துள்ளன என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் அளித்த பதிலில், “இந்திய எல்லைகளில் ஊடுரு வலை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் பலப் படுத்தப்பட்ட வேலிகளை அமைத்தல், உள வுத்துறை அமைப்புகளின் செயல்பாடு களை அதிகரித்தல், அதிநவீன ஆயுதங்களு டன் ராணுவ வீரர்களை பணியில் நிறுவுதல் மற்றும் ஊடுருவலை தடுக்க முன்னெச்ச ரிக்கை பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளி ட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2017 ஆம் ஆண்டு முதல் ஜம்மு - காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் என்பது கணிசமாக குறைந்து கொண்டே வரு கிறது. அதன்படி, 2017 ஆம் ஆண்டு 136 ஊடு ருவல்கள் நிகழ்ந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு அது 143-ஆகவும், 2019 ஆம் ஆண்டு 138 ஆகவும், 2020 ஆம் ஆண்டு 51 ஆகவும் குறைந்துள்ளது. இதேபோல், 2021 ஆம் ஆண்டில் 34 ஊடுருவல்கள் மட்டுமே நடந்துள் ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.