states

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு 2 தொழிலாளர்கள்  பலி

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு 2 தொழிலாளர்கள்  பலி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழை யால் ஏற்பட்ட நிலச்சரி வில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள னர்.  செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் மஹோர் தாலுகா படோரா மலைப் பகுதி யில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கோவிலுக்கான பாதையை சீரமைக்கும் பணிக ளில் ஈடுபட்டிருந்த தொழி லாளர்கள் தங்கி இருந்த கூடா ரத்தின் மீது மண் சரிந்து விழுந்த தில் அவர்கள் பலியாகி யுள்ளனர்.  இருவரின் உடல்களும் இடி பாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.