புதுதில்லி, நவ.8- பிரிட்டன் நாட்டின் பொரு ளாதாரம் தள்ளாடிக் கொண் டிருக்கும் நிலையில், அதற் குப் பொறுப்பேற்று 2 பிர தமர்கள் விலகி விட்டார்கள். ஆனால், இந்தியாவில் ஒன் றும் நடக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பி ரமணியசாமி கேள்வி எழுப்பி யுள்ளார். பிரிட்டனில் சந்தை மற் றும் அரசியலில் கொந்தளிப் பான சூழலுக்கு மத்தியில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதில் லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், அவ ரும் பதவியேற்ற 45 நாட்க ளிலேயே பிரதமர் பதவியிலி ருந்து விலகுவதாக அறிவித் தார். இதையடுத்து, அங்கு இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிராக ஸ்தி ரத்தன்மையைக் கொண்டு வருவேன் என்று அவர் கூறி யுள்ளார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிர மணியசாமி டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட் டுள்ளார். அதில், “சிறு, குறு தொழில் நிறுவனங்களும், விவசாயிகளும் தங்களது நிலுவைத் தொகையையும் கடனையும் செலுத்த முடியா மல் பேரழிவின் விளிம்பில் இருப்பது மிகவும் வருத்த மளிக்கிறது. பொருளாதாரம் தள்ளாடுகிறது. இங்கிலாந் தில் ஒரு சில வாரங்களி லேயே இரண்டு பிரதமர் களை மாற்றினர். ஆனால் இங்கே, யாரும் முன் வர வில்லை. எதுவும் நடக்க வில்லை” என பிரதமர் மோடி யை மறைமுகமாக விமர் சித்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிர மணியசாமி அண்மைக்கால மாக பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்.