states

img

ஒரே தொகுதியில் 2 கட்ட தேர்தல்!?!

2 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 28 (வியாழன்) அன்று தொடங்குகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள  88 தொகுதிகளுக்கும் மணிப்பூரில் ஒரு தொகுதியில் உள்ள பாதி பகுதி களுக்கும் ஏப்ரல் 26 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று  வாய்கிழியப் பேசும் பாஜக ஆட்சி யாளர்கள் ஓரிரு கட்டங்கள் அல்லது  இரண்டு மூன்று கட்டங்களில் கூட தேர்தல் நடத்திட திராணியற்ற வர்களாக உள்ளனர் என்பதையே தற்போதைய 7 கட்டத் தேர்தல் அறிவிப்பு நடைமுறைகள் உணர்த்துகின்றன. அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் கொழிக்கிறது என்று வாய்ச்சவடால் அடிக்கும் பாஜக ஆட்சி, மோடியின் - அமித்ஷாவின் துணிச்சல் பற்றி கதைக்கும் ஆட்சி, அங்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் தடுப்பது எது? அங்கு 7 கட்டத் தேர்தல் நடத்துவது கையாலாகாத் தனம் தானே! இதையெல்லாம் விட இன்னும் நகைப்புக்குரியது, மணிப்பூர் மாநிலத்தின் 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் உள்ள பாதி பகுதிகளுக்கு ஒரு கட்டத் தேர்தலும் மீதிப் பகுதிகளுக்கு இன்னொரு கட்டத் தேர்தலும் நடத்துவதுதான். அங்கு சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறதே! ஒரு தொகுதியிலேயே முழுவதுமாக, ஒரு கட்டமாகத் தேர்தல் நடத்த முடியாததுதான் இவர்களின் லட்சணம்!

;