states

img

ஒன்றிய அரசின் நிதி உதவித் திட்டங்களின் கீழ் 2 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளர்- பி.ஆர். நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

ஒன்றிய அரசின் நிதி உதவித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன் அடைந்து உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளிக்கையில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து,  அரசு எடுத்துள்ள முயற்சிகள் என்ன என்றும், இதனால் பயனடைந்தவர்கள் மாநில வாரியாக எவ்வளவு என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் சுஸ்ரி ப்ரதீமா பௌமிக், தேசிய ஊனமுற்றோர் கடனுதவி மற்றும் வளர்ச்சி கார்ப்பொரேஷன் மூலமாக பல்வேறு கடன் உதவித் திட்டங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதன்கீழ் தமிழ்நாட்டில் 25,525.52 லட்சம் ரூபாய், 73,684 பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், கேரளாவில் 12,447.11 லட்சம் ரூபாய் 13,289 பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், நாடு முழுதும் மொத்தமாக 1,28,917.38 லட்சம் ரூபாய் 2,08,744 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

(ந.நி

;