states

பள்ளிக்குச் சென்று இரண்டு வருடமாகிவிட்டது அதிகாரிகளின் “செயலற்ற தன்மை” கல்வி உரிமையைப் பறிக்கிறது

புதுதில்லி, ஜன.18- குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அதிகாரிகளின் “செயலற்ற தன்மை” குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையை பறிக்கிறது என  தில்லி உயர்நீதிமன்றத்தில் 12 வயது சிறுமி மனுத்தாக்கல் செய்துள்ளார். தில்லியைச் சேர்ந்த  சிறுமி தியாகுப்தா (12)  தாக்கல் செய்துள்ள மனுவில், 12 வயது மற்றும் அதற் கும் குறைவான வயதுடைய குழந்தை களுக்கான தடுப்பூசி திட்டம் தொடர் பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.  ஏப்ரல் 2021 முதல் மே 2021 வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை   2020-ஆம் ஆண்டை  விட “மிகப்பெரிய அளவில் உயர்ந்துள் ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடு வதில் அதிகாரிகளின் “செயலற்ற தன்மை” குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையை பறிப்பதாக அந்த மனுவில் சிறுமிதெரிவித்துள்ளார். இது குறித்து தியா குப்தா (12)  அளித்தப் பேட்டியில், “நாட்டில் தற்போது 15 முதல் 17 வயதுடையோ ருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரு கிறது. ஆனால், 12 வயதுக்கும் கீழ்  உள்ள எங்களுக்கு தடுப்பூசி செலுத்து வது பற்றி எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. நாங்கள் பள்ளிக்குச் சென்று இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. வீட்டி லேயே இருப்பது மிகுந்த மன அழுத்த த்தைத் தருகிறது. ஆனால், அரசாங்கம் எங்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி எதுவும் சொல்லவில்லை. வெளி நாடுகளில் எங்கள் வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதனால் நான் அரசாங்கத்துக்கு இந்த விண்ணப் பத்தை முன்வைத்துள்ளேன்” என்றார். தடுப்பூசி செலுத்திவிட்டால் துணிச்ச லுடன் பள்ளிக்குச் செல்வீர்களா என்ற  கேள்விக்கு, “நிச்சயமாகச் செல்வேன். தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்பில் இருந்து காக்கப் படுகின்றனர் என்பது குறித்து உலகம் முழுவதும் நிறைய அறிவியல்பூர்வமாக ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பி னும் ஒமைக்ரான் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலவில்லை” என்றார். ஒன்றிய அரசு சார்பில் வழக்கறிஞர் அனுராக் அலுவாலியா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தடுப்பூசி போடுவதே அரசின் முதன்மையான பணி. கிடைக்கப்பெறும் தடுப்பூசிகள் மூலம் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை மிகக் குறுகிய காலத்தில் அடைய அனைத்து முயற்சிகளும் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு மார்ச்  22-ஆம் தேதி விசாரிப்பதாக அறி வித்துள்ளது.

;