states

‘‘நாட்டையே கொள்ளையடிக்கிறீர்கள்’’

தெலுங்கானா, ஜூலை 2- தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் 2 நாள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்  பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்  கிழமையன்று ஹைதராபாத் வருகை தந்தார்.   இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரி வித்து போராட்டக்காரர்கள் ‘‘மணி ஹைஸ்ட்’’ இணையத் தொடரில் வரும்  கதாபாத்திரங்களின் உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஹைதராபாத்தில் எழுப்பப்பட் டுள்ள பேனர்களில் மணி ஹைஸ்ட் கதா பாத்திரங்கள் அடங்கிய படங்களுடன் ‘‘மிஸ்டர் மோடி, நாங்கள் வங்கியை மட்டும்தான் கொள்ளையடித்தோம். நீங்கள் நாட்டையே கொள்ளையடிக்கி றீர்கள்’’ எனப் பொறிக்கப்பட்ட வாச கங்கள் இடம்பெற்றுள்ளன.

;