சென்னை, செப். 26 - அதிமுகவின் பிரச்சனை அண்ணாமலை மட்டும்தானா? என்றும் மோடி அரசின் கொள்கை களை விமர்சிக்காதது ஏன் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிரு ஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், அதிமுக வெளியிட்டுள்ள தீர்மானம் குறித்து கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து விட்டதாகவும், தேசிய ஜன நாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிவிட்டதாகவும் இன்று அறிவித்திருக்கிறார்கள். கடந்த ஓராண்டாகவே அவர் களின் கூட்டணிக்குள் ஏராளமான குத்து வெட்டுக்கள் எல்லாம் நடந்து, பல கட்ட சமரச முயற்சிகள் அனை த்தும் நடந்து, அதில் சமரசம் ஏற் படாத சூழ்நிலையில், அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கூட்டணி யாக ஏற்கெனவே கடந்த காலங் களில் செயல்பட்டபோது கூட, ஈரோடு இடைத்தேர்தலில் அலுவல கத்திற்கான பெயரைக் கூட எத்த னை முறை மாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன்பு அதிமுக தலை வர்கள் போட்டியிடும் இடங்களில் பிரதமர் மோடியின் படத்தை போடாமல், பாஜக தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கே அழைக் காமல்தான் தேர்தலைச் சந்தித் தார்கள். இவ்வாறு ஒருங்கிணை ப்பில்லாத, முரண்பாடுகளைக் கொண்ட கூட்டணியாகத்தான் அதிமுக - பாஜக கூட்டணி இருந்து வந்தது. இன்றைக்கு அதிமுக வெளியேறியிருக்கிறது.
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை திரும்பத் திரும்ப தங்களை விமர்சிக்கிறார் என்பதை மட்டும்தான் காரணமாக சொல்கிறார்களே தவிர, நாட்டை நாசப்படுத்தும் பாஜகவின் அடிப் படையான கொள்கைகள் பற்றி எந்த விதமான விமர்சனமும் வைக்கவில்லை. மோடியைப் பற்றியோ, 9 ஆண்டுகளாக பாஜக எவ்வளவு மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது பற்றியோ சிறு வார்த்தை கூட அதிமுக கூறவில்லை. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரி லும் கூட மோடி அரசை எல்லா விதத்திலும் தூக்கிவைத்து, பாரா ட்டித்தான் பேசியிருக்கின்றனர். அவர்களுக்கு பிரச்சனையே அண்ணாமலைதான். இங்கே நமக்கு என்ன சந்தேகம் வருகிறது என்றால், அண்ணா மலையை மையப்படுத்தி இந்த கூட்டணியைவிட்டு வெளியேறு கிறோம் என்று கூறுபவர்கள், நாளைக்கு ஏதாவது ஒரு சமரச உடன்பாட்டிற்கு வரமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை முடிவுகளில் பிரச்சனை இல்லை. பாஜகவின் லட்சியங்கள், கோட்பாடுகள், ஒன்றிய அரசின் நட வடிக்கைகள், சிறுபான்மை மக்கள் மீது பாஜக நடத்தும் வெறுப்பு அர சியல் இவை எதுவும் அதிமுக வுக்கு பிரச்சனை இல்லை. மாறாக, அண்ணாமலை பேசியிருக்கும் ஒரு விஷயம் மட்டும்தான் கூட்டணி முறிவுக்கு காரணம் என்று கூறி னால், நாளைக்கு ஏதாவது சமரச உடன்பாடு ஏற்பட்டு, இவர்களுக் குள் மீண்டும் கூட்டணி வராது என்று நம்மால் எதிர்பார்க்க முடியவில்லை.
ஜெயலலிதா அவர்களே மெரினா கடற்கரையில், “என்னு டைய வாழ்க்கையில் நான் ஒரு முறை பெரிய தவறு செய்து விட்டேன்... நான் பாஜகவோடு கூட்டணி சேர்ந்ததுதான் என்னு டைய பெரிய தவறு.. அந்தத் தவறை இனிமேல் ஒருபோதும் தமிழ்நாட்டில் செய்யமாட்டேன். பாஜகவோடு தேர்தல் உறவு வைக்க மாட்டேன்” என்று கூறி னார். ஆனால் அதே பாஜகவுடன் தான் பின்னாளில் அதிமுகவினர் கூட்டணி வைத்தார்கள். நேற்று வரை கூட்டணியில்தான் இருந்தா ர்கள். ஆகவே, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது பலவித மான சந்தேகங்களை ஏற்படுத்து கிறது என்பதை கணக்கில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சிதைவது, அல்லது பாஜக தனிமைப்படுவது, பாஜக ஆட்சியை அப்புறப்படுத்தும் நிலைமை உருவாவது என்பது நாட்டிற்கான நல்ல செய்தி என்று பார்க்கிறோம். பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று அதிமுக இன்று எடுத்திருக்கும் இந்த கொள்கை முடிவானது, நாளையே வேறுபல மாநிலங்களில், வேறு பல கட்சிகளும் பாஜக கூட்டணி யிலிருந்து வெளியேறுவதற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சிதைவதற்கும் ஒரு துவக்கமாக அமையக்கூடும் என்றும் கருதுகிறோம். நிச்சயமாக இன்று உருவாகி யிருக்கும் ‘இந்தியா’ கூட்டணி, தமிழ் நாட்டில் இருக்கும் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ முன்பை விட மேலும் வலுவாக பாஜக அரசா ங்கத்தை எதிர்த்துப் போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.