states

‘மனித உயிர்கள் பலி: ஆளுநர் அமைதி காப்பது ஏன்?’

சென்னை,டிச.21- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான  மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சூதாட்ட நிறுவனங் கள் மூலம் பல்லாயிரம் கோடி  ரூபாய் லாபம் பெற்று வருபவர் களை ஆளுநர் சந்தித்ததன் நோக்க மென்ன? சூதாட்ட நிறுவனங்களின் ஆண்டு வருவாய் ரூ. 13 ஆயிரத்து 600 கோடி என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தொகை ரூ.29 ஆயிரம்  கோடியாக   உயரக் கூடும்  என்று கூறப்படுகின்றது. “பணம் பாதாளம் வரை பாயும் “என்ற பழமொழி உண்டு. எங்கெங்கு பாய்கின்றது, யார், யாருக்கு பாய்கின்றது என்பது பெரும் புதிராக உள்ளது. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கின்றன. மேலும் எத்தனை, எத்தனை உயிர் கள் பலியாகப் போகின்றன என்பது  குறித்து கவலைப்படாத ஆளுநர் அமைதி காப்பது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் அலட்சியப் படுத்துவதை கடுமையாகக் கண்டிப்பதுடன் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அந்த  அறிக்கையில் அவர் வலியுறுத்தி யுள்ளார்.