என்னதான் உன் பிரச்சனை
கல்வி கற்க வந்த நாங்கள்
கக்கூஸ் போனதா - இல்லை
கையைக் கட்டிக் கொண்டு
உங்கள்முன் கையேந்தி நிற்காமல்
கைப்பை தூக்கி - நாங்கள்
கல்வி கற்க செல்வதா?
மாலையில் மட்டும் எரியும்
எங்கள் அடுப்படியை கேட்டுப்பார்
பள்ளிக்கு சென்ற மாணவன் மட்டும்
மத்தியான உணவுண்ணும்
மகத்துவம் சொல்லும்
இரவு சாப்பாடு கொஞ்சம் மீதாமாகாதா என
காத்து கிடக்கும் காலை வேளையின்
கதைகள் பல சொல்லும்
கால் வயிற்றுடன் பள்ளி சென்ற
எங்கள் கடுந் துயரை எழுதாமல்
பள்ளி கக்கூஸை எட்டிப் பார்த்து
நரகலை அள்ளி நாளிதழில் தெளிக்கிறாய்
கக்கூஸை மோந்து பார்த்த
உன் காகிதமும் பேனாவும்
நாற்ற மடிக்குது நரகல் வாசனையில்...