states

விளாடிமிர் புடின் - கிம் ஜோங் உன் சந்திப்பு

வோஸ்டாச்னி(ரஷ்யா), செப். 14 - உலக புவி அரசியல் அரங்கில் பரபரப்பான நிகழ்வாக, ரஷ்ய ஜனாதி பதி விளாடிமிர் புடின் - கொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஆகியோரது சந்திப்பு செப்டம்பர் 14 வியாழனன்று திட்டமிட்டபடி நடந்தது.  ரஷ்யாவின் தூரக் கிழக்கு பிரதேசங்களில் ஒன்றான ஆமுர் பிராந்தி யத்தில் வோஸ்டாச்னி நகரில் அமைந்துள்ள ரஷ்யாவின் சிறப்பு வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. புடினைச் சந்திப்பதற்காக வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிலிருந்து ரயில் மூலமாகவே பயணித்து வந்தார் கிம் ஜோங் உன்.  ஏகாதிபத்திய உலகம்  இந்த இரண்டு தலைவர் களின் தலைக்கும் விலை வைத்துள்ளது. இரு நாடு களின் மீதும் பல்வேறு வித மான தடைகளை விதித்துள் ளது. இவை அனைத்தையும் மீறி நடந்துள்ள இந்த சந்தி ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் என்று சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல்களுக்குப் பின்னர், செய்தியாளர்களி டம் கிம் தெரிவித்தார்.