states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா வில் கொரோனா பேரிடரின் போது நிறுத்தப்பட்ட “லயன் சவாரி” சேவை திங்களன்று மீண்டும் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் சேவையை தொடங்கி வைத்தார்.

ஸ் பெயினின் தென் கிழக்கு நகரமான முர்சியாவின் அட்டாலயா பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

அதிமுக கூட்டணி முறிவுக்குப் பின் முதல் முறையாக தில்லிக்குச் சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி னார்.

ஊழல் வழக்கு தொடர்பாக ஆந்திரப் பிர தேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு நீதிமன்றக்  காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கண்டித்து சந்திரபாபு நாயுடு மகன் நரா லோகேஷ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செய லாளராக கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சர்வதேச விமானநிலையத்தில் திங்களன்று காலை குவைத் செல்லும் விமானத்தை இயக்க விமானி இல்லாததால், சுமார்  2:30மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது.

இந்தியாவில் மட்டும் ரூ.600 கோடியை தாண்டி வசூல் செய்த முதல் இந்தி திரைப்படம் என்ற  பெருமையைப் பெற்றது “ஜவான்” திரைப்படம். ஷாருக்கான் நடித்த “ஜவான்” திரைப்படம் பாலிவுட்  படமாக இருந்தாலும், அதனை இயக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அட்லீ என்பது குறிப்பி டத்தக்கது.'

திருவில்லிபுத்தூர் அருகே திங்களன்று நடை பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் விவசாயி யை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்க பாண்டி யன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்  பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்க ளில் நடைபெறவுள்ள புரட்டாசி கோவில் திரு விழாவை முன்னிட்டுஆண்டிப்பட்டி ஆட்டுச் சந்தை யில் திங்களன்று சுமார் ரூ.50 லட்சத்திற்கு ஆடு கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 4,02,553  வாகனங்களை விற்பனை செய்துள்ள தாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.