ஹைதராபாத், ஜூலை 13 - மக்கள் தொகை கட்டுப்பாடு விஷயத்தில் இந்தியாவின் பூர்வகுடி கள் (இந்துக்கள்) விழிப்புடனேயே இருப்பதாக உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் கூறியிருந்த நிலையில், முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் இல்லையா? என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். ஆராய்ந்து பார்த்தால், பழங்குடி யினரும் திராவிடர்களும் மட்டுமே இந்தியாவின் பூர்வீகக்குடிகள் என்றும் ஒவைசி சுட்டிக்காட்டியுள்ளார். 2023ஆம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியிட்ட தனது ஆய்வறிக்கையில் ஐக்கிய நாடுகள் அவை தெரி வித்திருந்தது. 2050-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 131 கோடியாகவும் இருக்கும் என்றும் ஐ.நா. ஆய்வு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத், “மக்கள் தொகை சமத்துவமின்மை ஏற்படக்கூடாது; மக்கள் தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு காரண மாக பூர்வக்குடிகள் (இந்துக்கள்) இடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது; ஆனால் ஒரு குறிப்பிட்ட சாரரின் (முஸ்லிம்களின்) மக்கள் தொகை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது” என்று வழக்கம்போல வெறுப்பைக் கக்கியிருந்தார். இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலை யில், மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியும் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பூர்வகுடிகளின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ள தாக யோகி ஆதித்யநாத் கூறுகிறார். அவர் கூறும் அந்த பூர்வகுடியினர் யார்? முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் இல்லையா?” என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். “உண்மையாக சொல்லப்போனால், இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்களும், பழங்குடியினரும் மட்டும்தான்” என்றும் அவர் கூறி யுள்ளார். “இந்தியாவிலும் 2016-இல் 2.6 சதவிகிதமாக இருந்த மொத்த கரு வுறுதல் விகிதம் தற்போது 2.3 சத விகிதமாக குறைந்துள்ளது. இத னால் ‘மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு க்கு நாட்டில் எந்தச் சட்டமும் தேவை யில்லை’ என்று ஆதித்யநாத் கட்சி யைச் சேர்ந்த சுகாதார அமைச்சரே கூறியிருக்கிறார். இந்தியாவில் முஸ் லிம்களே அதிகளவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துபவர் களாக உள்ளனர்” என்றும் ஒவைசி புள்ளிவிவரங்களை அளித்துள்ளார்.