states

img

பயணிகள் விமானக் கட்டண வரம்பை தாரைவார்த்துவிட்டு, தனியார் நிறுவனத்திடம் கெஞ்சும் ஒன்றிய அரசு

பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்

காலையில் ஒரு விலை, அதே பயணச்சீட்டுக்கு மாலையில் ஒரு விலை என கொள்ளையடிக்கும் கதவினை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு திறந்துவிட்டுள்ளது. 

கோவை, ஜூன் 7- உள்நாட்டு பயணிகளுக்கான விமானக் கட்டண வரம்பை தாரைவார்த்துவிட்டு, தற்  போது தனியார் நிறுவனத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழு  தலைவர் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் நிகழ்ந்த பெரும் ரயில் விபத்  துக்கு பிறகான நாட்களில், அப்பகுதியிலி ருந்து இயக்கப்படும் பயணிகள் விமானங் களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளன. இதனால், ரயில் விபத்தில் இறந்த வர்களின் உடலைக் கொண்டு செல்லும் முயற்சி யில் ஈடுபட்டிருந்த அவர் தம் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இது நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதன் காரணமாக எழுந்த அழுத்தத்தை யொட்டி, ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், பயணிகள் விமான டிக் கெட் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய விமான சேவை நிறுவனங்கள் சில நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும், என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே கடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின்போது, (கடந்தாண்டு டிச.15 அன்று) நாடாளுமன்றத்தில் விமான பயண டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து நான்  கேள்வி எழுப்பினேன். “உள்நாட்டு விமான போக்குவரத்தின் மீது பயணச்சீட்டு கட்டண வரம்பினை விலக்கிக்கொள்வது பற்றி, சமீ பத்தில் அரசு ஏதேனும் முடிவெடுத்து உள்  ளதா?” என்று எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய  விமான போக்குவரத்துத்துறை இணைய மைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே.சிங், “விமா னக் கட்டணங்களின் கீழ் வரம்பு மற்றும்  மேல்வரம்பு ஆகிய இரண்டும் 31.8.2022  அன்றிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள் ளது” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு பயணிகள் விமானக் கட்டண வரம்பினை அரசின் கட்டுப்பாட்டில் வைத்தி ருந்தபோது, பயணிகளின் நலனுக்கேற்ற வகை யில் கட்டணங்களை வைத்திருக்க முடிந்தது. மேலும், அரசுக்கு சொந்தமாக விமான நிறு வனம் இருந்தபோது, பேரிடர் காலங்களில் அவற்றை பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இலவசமாக பயன்படுத்த முடிந்தது. தற்போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு,  உள்நாட்டு பயணிகள் விமானக் கட்டண வரம்  பினை நீக்கி, அவற்றை தனியார் நிறுவனங்க ளின் கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டது. இவ் வாறு செய்துவிட்டு, இப்போது இரட்டை நிலை யில் ஓர் அறிக்கையை ஒன்றிய அமைச்ச கத்தின் மூலம் வெளியிடுகிறது. உள்நாட்டு பயணிகளுக்கான பயணச்சீட்டு விலை நிர்ணயத்தை தனியார் விமான நிறு வனங்களின் கட்டுப்பாட்டில் விட்டுள்ள கார ணத்தினால், பண்டிகைக் காலங்கள், விடு முறை நாட்கள் மற்றும் பேரிடர் நேரங்களில்  விமான டிக்கெட் விலைகளை தங்கள் விருப்  பப்படி உயர்த்திக் கொள்கின்றனர். காலை யில் ஒரு விலை, அதே பயணச்சீட்டுக்கு மாலை யில் ஒரு விலை என கொள்ளையடிக்கும் கத வினை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்க ளுக்கு திறந்து விட்டுள்ளது. இதனால் உள்  நாட்டு விமான பயணிகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விலை நிர்ணயத்தை தனியாரிடம் விட்டு விட்டு, இப்போது அவர்களி டம் நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள் என்று அரசு கெஞ்சிக்கொண்டு இருக்கிறது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த முரண்பாடான செயலை கண்டிக்கி றேன். உள்நாட்டு பயணிகள் விமான கட்டண வரம்பை மீண்டும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி. வலி யுறுத்தி உள்ளார்.

;