பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவனம் கடுமையான நிதி முடக்கத்தை சந்தித்துள்ளது என ஐநா செய்தித் தொடர்பா ளர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அகதிகளுக்கு கொடுக்கப் படும் நிவாரணத்தை முடக்கும் வகையில், அவ்வமைப்பிற்கு இதுவரை நிதி வழங்கி வந்த நாடுகளின் திட்டமிட்ட நிதி நிறுத்தம். தொடர்ந்து நிவாரணத்தை முடக்கும் இஸ்ரே லின் முயற்சிகள் மரணத்தை சந்தித்து வரும் பாலஸ்தீனர்களுக்கு எந்த உதவியையும் செய்ய முடியாத நிலைக்கு அகதிகள் அமைப்பை தள்ளியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணி குட்டரெஸின் செய்தித் தொடர்பா ளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இதனை அவ்வமைப்பின் ஆணையா ளர் ஜெனரல் பிலிப், ஐ. நா அவைத் தலைவ ருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டி தெரிவித்தார். இதனால் ஐநா பொதுச்சபை தீர்மானம் 302 மூலம் வழங்கப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றக் கூடிய அமைப்பின் திறன் இப்போது தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ளது என்றும் டுஜாரிக் தெரிவித்தார். இந்த சூழ்நிலை லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசிய சேவை களை வழங்க விடாமல் முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.