states

உக்ரைன் ரஷ்யா போர் களத்தில் இருந்து

புடினுடன் பேசுவதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரஸ் முயன்றதாக அவரது செய்தி தொடர்பாளர் கூறினார். ஆனால் அதனை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் உண்மையை பேசவில்லை எனவும் ரஷ்யா கூறியுள்ளது.

அமெரிக்காவின் பல நட்பு நாடுகளிடமிருந்து உக்ரைனுக்கு டோன்பாஸ் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க ஏராளமான போர் விமானங்கள் தரப்படிருப்பதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் பிரபல ஊடக நிறுவனமான MSNBCன் முக்கிய செய்தியாளர் ஆப்பிரிக்க- அமெரிக்கரான மால்கம் நான்ஸ் என்பவர் உக்ரைனுக்கு ஆதரவாக  போரிட தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக வும் உக்ரைனில் இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இவர் நீண்ட கால ரஷ்யா எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீது இவர் களுக்கு இருக்கும் வெறி கண்டு சிரிப்பதா? அழுவதா?

தன்னிடம் கைவசம் உள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு தந்துவிட்டதாகவும் மேலும் ஆயுதங்கள் கொடுக்க இராணுவ ஆலைகளுக்கு உற்பத்தி செய்யுமாறு ஆணையிட்டிருப்பதாகவும் ஜெர்மனி ஜனாதிபதி ஷோல்ஸ் கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் விரைவில் உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஏவுகணைகள் தீர்ந்துவிடும் என கணித்தன. மாறாக ரஷ்யா இன்னும் ஏவுகணைகளை ஏவி வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவின் உற்பத்தி திட்டமிடலும் நவீனமயமும்தான் என உதவி ஜனாதிபதி யூரி போரிசவ் தெரிவித்துள்ளார்.

ஜி 20 நாடுகளின் மாநாடில் ரஷ்ய நிதி அமைச்சரும் இணையம் வாயிலாக பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்கும் திட்டம் இல்லை என ஜி 7 நாடுகள் கூறியுள்ளன. ஏனெனில் இந்தியா/சீனா ஆகிய தேசங்களும் பங்கேற்க உள்ளதால் அவர்களின் அதிருப்தி வேண்டாம் என ஜி 7 நாடுகள் நினைக்கின்றன. ஆனால் ரஷ்ய பிரதிநிதி பேசும் பொழுது வெளியேறிவிடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

தனது நலன்களுக்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்வோம் எனவும் கூறுகிறது. தனது போருக்காக உக்ரைன் உயிர்தியாகமும் பொருள் இழப்பும் செய்ய முன்வந்தால் ஏன் அமெரிக்கா மறுக்க வேண்டும்? பல போர்களில் அந்த நரித்தனத்தைதானே அமெரிக்கா செய்கிறது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரில் கவனம் செலுத்தி வருவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜிகாதிகள் மேற்கத்திய நாடுகளில் தாக்குதலை செய்ய வேண்டும் என ஐ.எஸ்.ஐ. எஸ்.இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆபத்தான அறைகூவல் விட்டுள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி ஆபத்தான மனிதர் எனவும் உக்ரைன்-ரஷ்யா இடையே சமாதானம் ஏற்பட முட்டுக்கட்டையாக உள்ளார் எனவும் இத்தாலிய பத்திரிக்கையாளர் ஆஞ்செலோ ஒர்ஸி கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் பிரான்சு அராசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு நிலைக்காக மக்கள் விலையை தரக்கூடாது எனவும் பிரான்சுக்கு ஏற்பட்ட இழப்புகளை அமெரிக்கா ஈடு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மேரி லெ பென் கூறியுள்ளார். இவருக்கும் மேக்ரோனுக்கும் இடையே வேறுபாடு குறைந்து கொண்டே வருவதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.\

உக்ரைனுக்கு சமாதான வரைவு ஒப்பந்தத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. உக்ரைன் சமாதானம் பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா இப்பொழுது பந்து உக்ரைன் பக்கத்தில் உள்ளது என கூறியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் எனும் இணைய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஒளிபரப்பும் அமெரிக்க நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதன் காரணமாக 7 லட்சம் சாந்தாதரர்களை இழந்துள்ளது. இதன் விளை வாக பல்லாயிரம் கோடி டாலர்கள் இழப்பு! வர்த்தக  தடைகள் ரஷ்யாவுக்கு மட்டுமல்ல; தடை விதிப்பவர் களையும் சேர்த்தே பாதிக்கிறது.

கிழக்கு உக்ரைனில் உள்ள ரொஸொவ்ஸ்கி எனும் பகுதி பொது வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மிக பெருவாரியானவர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி டான்பாக்ஸ் குடியரசுடன் இணைய வாக்களித்துள்ளனர்

போர் நடந்து கொண்டிருக்கும் சூழலிலேயே ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் சார்மாட் எனும் ஏவுகணை யை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. இதனை செய்யப்போவதாக பெண்டகனுக்கு தகவலும் கொடுத்தது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யா/பைலோ  ரஷ்யா வீரர்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.  இதனை டென்னிஸ் சர்வதேச அமைப்பு கண்டித்துள்ளது. 

அமெரிக்காவின் பல நட்பு நாடுகளிடமிருந்து உக்ரைனுக்கு  டான்பாஸ் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க ஏராளமான போர் விமானங்கள் தரப்படிருப்பதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. 

தன்னிடம் கைவசம் உள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு தந்துவிட்டதாகவும் மேலும் ஆயுதங்கள் கொடுக்க இராணுவ ஆலைகளுக்கு உற்பத்தி செய்யுமாறு ஆணை யிட்டிருப்பதாகவும் ஜெர்மனி ஜனாதிபதி ஷோல்ஸ் கூறியுள்ளார்.