நாடாளுமன்ற தேர்தல் களம் நோக்கி....
எரியுது எரியுது மணிப்பூரு!
எண்ணெய் ஊத்துது சர்க்காரு!
ரொம்ப ஜாலியா
வேத வேள்வியா
மூண்டு எரியுது போய்ப் பாரு!
மோடி நீலி கண்ணீரு!
(எரியுது)
பாரதம் என்று பேர்மாத்தும் வெறித்தனமே!
பாரத தேவிதான் நிர்வாண ஊர்வலமே!
கொடு நரகம்!தினம்
இனக்கல கம் !அங்கு
நாட்டாமை செய்வது நரிகளடா!
நாக்பூர் செய்கிற லீலையடா!
பூணூல் முடிச்சு இறுக்குது கழுத்தை இறுக்குதடா!
புராண கால திரிபுரமா தேசம் கருகுதடா!
(எரியுது)
ஜனங்களைப் பிரித்து ஆள்கிறான் தடிமாடு!
கார்ப்பரேட் சுரண்ட மலைகளில் ஏற்பாடு!
மூடு மந்திரம் அல்ல
மோடி மந்திரம் இது!
முக்காட்டை விலக்கி இளிக்குதடா!
முச்சந்திச் சிரிப்பாய் சிரிக்குதடா!
அகோரிக் கூட்டம் செத்த பிணத்தைத் தான்
தின்னுமடா!
ஆர் எஸ் எஸ் நம்மை உயிருடன் பிச்சுச்
தின்னுதடா!
(எரியுது)
அலகாபாத்தை பிரயாக் ராஜ்ஆக்கினான்!
மணிப்பூர் பேரையும் பிணஊர் என்றாக்குவான்!
தினம் தினம் பிணம் விழும்!
தெருவெங்கும் கொலை விழும்!
மணிப்பூர் மலைகள் சவமேடா?
மாறுது நாடே சுடுகாடா!
போட்டுத் தள்ளுறான் ஓட்டு எந்திரத்தை
நெனச்சுக்கிட்டு!
காட்டு தர்பாரு ஆட்சிக்கு சீக்கிரம் பாடை கட்டு!
(எரியுது)