புதுதில்லி, மே 3 - இந்தியாவில் வேலையின்மை விகிதமானது, 2023 ஏப்ரல் மாதத் தில் 8.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வேலை யின்மை விகிதம் 7.8 சதவிகிதமாக இருந்த நிலையில், அது ஏப்ரல் மாதத்தில் 31 புள்ளிகள் அதிகரித்து 8.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2022 டிசம்பர் துவங்கி 2023 மார்ச் வரையிலான முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும். குறிப்பாக, இந்தக் காலத்தில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.51 சதவிகிதத்தில் இருந்து 9.81 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பும் கடந்த 4 மாதங் களில் இல்லாத உச்ச அளவாகும். கிராமப்புற வேலையின்மை விகிதம் மட்டும் சற்று குறைந்துள் ளது. கடந்த மார்ச் மாதம் 7.47 சத விகிதமாக இருந்த கிராமப்புற வேலையின்மை விகிதம், ஏப்ர லில் 7.34 சதவிகிதமாக குறைந் திருக்கிறது. இதுதொடர்பான புள்ளிவிவ ரங்களை, தனியார் ஆய்வு நிறுவன மான ‘இந்திய பொருளாதார கண் காணிப்பு மையம்’ (Centre for Monitoring India Economy - CMIE) வெளியிட்டுள் ளது.
கிராமப்புற தொழிலாளர்களில் சுமார் 94.6 சதவிகிதம் பேர் வேலை க்குச் சேர்ந்தனர். அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் வேலை தேடு பவர்களில் 54.8 சதவிகிதம் பேர் மட்டுமே புதிய வேலைகளைப் பெற் றுள்ளனர் என்றும் பொருளா தாரக் கண்காணிப்பு மையம், கிராமப் புறங்களில் அரசாங்கத்தின் வேலை உறுதித் திட்டத்திற்கான தேவை குறைந்து வருவதாக ஒரு மதிப்பீட்டை முன்வைத்துள்ளது. முன்னதாக, சிறந்த குளிர்கால பயிர் விதைப்பு மற்றும் முறைசாரா துறை வேலைவாய்ப்புகளின் மீட்சியின் பின்னணியில் ஜனவரி முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வேலைக்கான தேவை குறைந்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தி ஊரக வேலை யுறுதித் திட்டம் போன்றவற்றின் காரணமாகவே ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு கிடைத்து வரு கிறது. ஆனால், ஏப்ரல் மாத புள்ளி விவரத்தை காட்டி, வேலை வாய்ப்பு திட்டத்திற்கான தேவை ஏற்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிஎம்ஐஇ முயல்கிறது.