states

குழந்தைகளின் சிந்தனைத்திறனை அழிக்கும் முயற்சி நடைபெறுகிறது

திருவனந்தபுரம். அக்.2- குழந்தைகளின் மன தில் மூடநம்பிக்கையை விதைத்து அவர்களின் சிந்த னைத் திறனை அழிக்கும் முயற்சி நாட்டில் நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.  திருவனந்தபுரம் இஎம்எஸ் அகாதெமியில் பாலர் சங் கத்தின் அகில இந்தியப் பயி லரங்கம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி தலைமையில் வியாழ னன்று துவங்கியது. பயில ரங்கை  துவக்கி வைத்து பேசும் போதே மேற்கண்டவாறு  கூறினார். அவர் மேலும் பேசி யதாவது:- நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குழந்தை கள் பொறுப்பு பிரதானமா னது. இப்போது வால்மீகி  இராமாயணக் கதாபாத்தி ரங்கள் அரசியல் நோக்கத்  திற்காகப் பயன்படுத்தப்படு கின்றன. அதை தர்க்க ரீதி யாக எதிர்க்க வேண்டும். சந்  திரனின் வடிவம் மாறுவ தற்கு விநாயகரின் சாபமே காரணம் என்கிறது இன் னொரு கதை. உலகில் ஏற்  படும் மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் பார்க்கும்  மாணவர்கள் இதற்கான அறி வியல் காரணத்தை ஆராய  வேண்டும். இது மதத்திற்கு எதிரானது அல்ல.  மூட நம்பிக்கைக்கு எதிரானது.  வகுப்புவாத சக்திகள் மக்க ளின் மனதைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. இதன் மூலம் வேலையில்லாத் திண்டாட் டம், வறுமை குறித்த கேள்வி கள் மறைந்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பன்முகத்தன்மையை யும் பன்மைத்துவத்தையும் கொண்டாடும் நாடு நமது  நாடு. இந்த பன்முகத்தன்மை யை மொழி, கலாச்சாரம் மற் றும் பழக்க வழக்கங்களில்  மட்டுமல்ல, மதத்திலும் காண லாம் என்றார்.

;