states

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் “பாரத்” பெயரும், இந்துக் கடவுளின் படமும்

ஒன்றியத்தில் இருந்து பாஜக ஆட்சியை அகற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி கள் ஒன்றிணைந்து “இந்தியா” என்ற  பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி யுள்ளன. இந்த கூட்டணி பெயரால் கலக்க மடைந்த ஒன்றிய பாஜக அரசு நாட்டின் பெயரையே “பாரத்” என மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இதன் முதல் படியாக ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இருக்கை பலகை பெயர் “பாரத்” என  மாற்றப்பட்டது. அதன்பிறகு ஜனாதிபதி கோப்புகளிலும் “பாரத்” என அச்சிடப் பட்டது. மத்திய கல்வி வாரியமான என்சி ஆர்டி நாட்டின் பெயரை “பாரத்” என பயன்படுத்தலாம் என முன்மொழிந்தது.  இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் தேசிய மருத்துவ ஆணையம் தனது  சின்னத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரியின்  புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி யாவுக்குப் பதிலாக “பாரதம்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஆணைய தலைவர் மழுப்பல் தேசிய மருத்துவ ஆணைய சின்ன த்தில் “தன்வந்திரி” மற்றும் “பாரதம்” பெயர் இடம் பெற்றதற்கு பல கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் பி.என்.கங்காதர் இது தொடர்பாக அளித்த விளக்கத்தில்,”தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு - வெள் ளையில் இருந்தது. தற்போது நிறம் மட்டு மே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் கடவுளாக தன்வந்திரி இருக்கிறார். அதேபோல “பாரதம்” என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதும் உண்மைதான், அப்படிச் செய்வதற்குப் பின்னால் வேறு எந்தக் காரணமும் இல்லை” என மழுப்பலாகக் கூறியுள்ளார்.