திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநி லத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மின்னல் வேகத் தில் உள்ளது. போதுமான சுகாதார கட்டமைப்பு இல்லா ததால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உருக்குலைந்துள்ளது. முக்கியமாக வடக்கு வங்கத்தின் பல பகுதிகள், மால்டாவில் டெங்கு காய்ச்சலின் மைய பகுதியாக உள்ளது. அங்கு மக்கள் சாரை சாரையாக மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில், திங்க ளன்று நிலவரப்படி மேற்கு வங்க மாநி லத்தின் மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 38,181 ஆக உயர்ந் துள்ளது. இறப்பை மறைக்கும் அவலம் நாளுக்கு நாள் டெங்கு தொடர்பான இறப்புகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தாலும், பலியானோரின் உண்மை தகவலை மாநில சுகாதாரத்துறை வெளியிட மறுத்து வரு கிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு தடவை கேள்வி எழுப்பியும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை. டெங்கு அதிகரிப்பால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது மேற்குவங்க சுகா தாரத்துறை.