states

img

ரூ.340 கோடியில் மேம்பாலப் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்

மதுரையில் கோரிப்பாளையம் சந்திப்பில் 190 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியையும், மதுரை - தொண்டி சாலையில் அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் 150 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.