states

அசாமில் அடுத்தடுத்து 3 மதரசாக்களை இடித்துத் தரைமட்டமாக்கிய பாஜக அரசு!

கவுகாத்தி, செப்.1- அசாம் மாநிலத்தில், பயங்கர வாதிகளுடன் தொடர்பு கொண்டி ருப்பதாக கூறி, இஸ்லாமியக் குழந்தைகள் படிக்கும் 3 மதரசாக் களை அம்மாநில பாஜக அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. அசாமில் தற்போது ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள மொரிகான் மாவட்டம் மொய்ராபாரி பகுதியைச் சேர்ந்த முப்தி முஸ்தபா என்பவர், அல்கொ ய்தா பயங்கரவாத அமைப்புடன் பணப்பரிமாற்றம் செய்ததுடன் சிலருக்கு மதரசாவில் அடைக்க லம் கொடுத்ததாக கடந்த மாதம்  குற்றம் சாட்டப்பட்டார். அவர் கைதும் செய்யப்பட்டார். அத்துடன் அவருக்குச் சொந்தமான மதரசா வும் இடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு பர்பேட்டா மாவட்டத்திலும் மதரசா  ஒன்று இடிக்கப்பட்டது. இதுகுறித்து அசாம் கூடுதல் போலீஸ் டிஜிபி  (சிறப்பு) ஹிரேன் நாத் கூறும்போது, ‘‘பர்பேட்டா பகுதியைச் சேர்ந்த மதரசாவை வங்கதேசத்தைச் சேர்ந்த சைபுல் இஸ்லாம் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

அவர் அன்சருல்லா பங்களா டீம் (ஏபிடி) என்ற தீவிரவாத அமைப்பை நடத்தி வந்ததும், அது இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் உள்ள தும் தெரியவந்துள்ளது’’ என்றார். இவற்றுக்கு அடுத்ததாக போங்கைகாவன் மாவட்டத்தில் உள்ள கபைதரி பாகம்-4 கிராமத்தில் அமைந்துள்ள மர்காஜுல் மா-ஆரிப் குவாரியானா மதரசாவும் தற்போது இடித்து தள்ளப்பட்டுள்ளது. அசாமில் இடிக்கப்பட்ட 3-வது மதரசா இதுவாகும். இதுபற்றி போலீஸ் சூப்பி ரெண்டு கூறும்போது, ‘மாவட்ட நிர்வாகம் பிறப்பித்து உள்ள உத்தரவில், மதரசாவின் கட்டமைப்பு பலவீனம்  அடைந்து உள்ளது. இதுதவிர, மனி தர்கள் வசிப்பதற்கு பாதுகாப்பற்றது’  என தெரிவித்து உள்ளது. இந்த மதரசா கட்டடங்கள் விதிகளின் கீழ் கட்டப்படவில்லை” என காரணம் கூறியுள்ளார். “அல்கொய்தா பயங்கரவாதி களின் மையமாக மதரசாக்கள் உள்ள தாலேயே அவை இடிக்கப்பட்டன. இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் மையமாக அசாம் மாறி வருகிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கூறியுள்ளார். மேலும், பயங்கரவாத அமைப்பு களான அல்கொய்தா இந்திய துணை கண்டம் மற்றும் அன்சருல்லா பங்களா குழுவுடன் தொடர்புடைய வர்கள் என்று குற்றச்சாட்டி இமாம் மற்றும் மதரசா ஆசிரியர்கள் என இதுவரை 37 பேர்களை அசாம் பாஜக அரசு கைதும் செய்துள்ளது.