states

img

தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ வேண்டும்!

சென்னை, செப். 26 - சென்னையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆய் வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செய லாளர் அமுதா, காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக் கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  இந்த ஆய்வுக்கூட்டத் தில் பேசிய முதல்வர், “கடந்த ஒரு மாத காலமாக பத்திரிகை மற்றும் ஊட கங்கள் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன என்பது போன்ற  தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. புள்ளிவிபரங் களை ஆய்வுசெய்து பார்த் தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  எனினும், பள்ளி, கல்லூரி கள் மற்றும் பெண்கள் அதி கம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து பணிகள் மூலம் கண்காணித்து, தவறுசெய் பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாது காப்பை உறுதிசெய்ய வேண்  டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.