states

சட்டப்பிரிவு 142-இன் கீழ் விடுதலை கோரும் நளினி, ரவிச்சந்திரன்

புதுதில்லி, செப்.27- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ள தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி,  ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய - மாநில அரசு களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் முருகன், சாந்தன், பேரறி வாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச் சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர்  கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கிய நிலை யில், கடந்த 2014-ஆம் ஆண்டு அது  ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. இதனிடையே, இந்த 7 பேரும் சிறை யிலேயே 31 ஆண்டுகளைக் கழித்து விட்ட நிலையில், அவர்களை விடு தலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. தமிழ்நாடு சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அந்த தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதால், இவர்களின் விடுதலை தாமதமாகி வந்தது.

ஆளுநரின் தாமதம் குறித்து, பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த- நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதி மன்ற அமர்வு, பேரறிவாளன் விடு தலை விவகாரத்தில், ஆளுநர் முடி வெடுப்பதில் தாமதம் செய்துவரும் நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு தங்களுக்கு (உச்சநீதிமன்றத்திற்கு) வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதாக அறிவித்தது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு  மே 18-ஆம் தேதி பேரறிவாளன் விடுதலையானார். இதனிடையே, பேரறிவாளனைப் போலவே தங்களையும் அரசிய லமைப்பு சட்டப்பிரிவு 142-இன் கீழ் விடுதலை செய்யக்கோரி, நளினி, ரவிச் சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தினர். அவர்களின் மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு முன்பாக திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசா ரித்த நீதிபதிகள், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரது மனு தொடர்பாக ஒன்றிய - மாநில அரசுகள் விளக்கம் அளிக்கு மாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

;