சென்னை, ஆக.8- சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்ட ணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வை எவ்வித முன் அறி விப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்ப தாக ஆராய்ச்சி மாணவர்கள் தெரி விக்கின்றனர். முழு நேரம் பிஎச்டி படிக் கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட் டுரை சமர்ப்பிக்க முன்பு கட்டணம் 1,500 ரூபாயாக இருந்தது. அவை தற்போது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள் ளது. அதேபோல் பகுதி நேரம் பிஎச்டி மாணவர்களுக்கான கட்டணம் 3,500 ரூபாய் என்று இருந்தது தற்போது 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க தற்போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மாணவர் களை தெரிவிக்கின்றனர். இதுவரை ஆராய்ச்சிக் கட்டுரை களை திருத்துவதற்கு வெளிநாட்டிற்கு அனுப்பியதில்லை என்றும் தற்போது வெளிநாட்டுக்கு அனுப்புவதால் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பை மாற்ற முன்பு 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக வும், ஜூன் மாதம் நடைபெற்ற சிண்டி கேட் மற்றும் செனட் கூட்டத்தில் இதற் கான முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, கட் டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள தாகவும் தெரிய வருகிறது. இந்நிலை யில் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி இந்த கட்டண உயர்வை மறுத் துள்ளதோடு கட்டணம் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சி யில் முக்கியப் பங்கு வகிக்கின்றன பல்க லைக்கழகங்கள். நிதி நெருக்கடியை காரணம் காட்டி இப்படி பலமடங்கு கட்ட ணத்தை உயர்த்துவது ஏற்புடையதல்ல .இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆராய்ச்சி மாணவர்களின் கட்டண உயர்வு சாதாரண ஏழை எளிய மாண வர்களை கடுமையாக பாதிக்கும் என் றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.