states

img

தூத்துக்குடியில் மாணவர் சங்க தியாகிகள் சோமு, செம்பு நினைவு தினம்

தூத்துக்குடி,மார்ச் 31 தூத்துக்குடி மாவட்டம் துரைசாமி புரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மற்றும்  போல்ட‌ன்புரம் பகுதி சேர்ந்த செம்புலிங்கம் ஆகிய இரண்டு பேரும் மதுரை தியாக ராஜர் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். அவர்கள்  சாதி ஆதிக்க  சக்தியினருக்கு எதிராக மாணவர் களை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர். அதேபோல் தொடர்ந்து மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று  வந்த சாதி ஆதிக்க சக்திகளை தோற்கடித்து 1981 ஆம் ஆண்டிற்கான மாணவர் பேரவை தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளராக செம்புலிங்கம்  வெற்றிபெற்றார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத  சாதிஆதிக்க சக்தியினர் மார்ச் 31ஆம் தேதி 1981 ஆம் ஆண்டு சோமசுந்தரம், செம்புலிங்கத்தை வெட்டி படுகொலை செய்தனர். இந்த தியாகிகளின்  42ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சோமு, செம்பு அறக்கட்டளை சார்பில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில்   அஞ்சலி செலுத்தப் பட்டது. பின்னர் போல்டன்புரத்திலுள்ள செம்புலிங்கம் மற்றும் துரைச்சாமிபுரத்தி லுள்ள சோமசுந்தரம் ஆகியோர் இல்லத்திற்கு சென்று அவர்களின் படத்திற்குஅஞ்சலி செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் சோமு-செம்பு அறக்கட்டளை நிர்வாகிகள் பொறியாளர் காளிதாஸ், மருத்துவர் சுப்பையா மற்றும்  சக நிர்வாகிகள், நண்பர்கள், இந்திய மாண வர் சங்க மாநில தலைவர் அரவிந்த்சாமி, மாநில செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ரா.கார்த்திக், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும்  மாணவர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

;