states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஐடிபிஐ வங்கியை தனி யார்மயமாக்கு வதற்கான நடவடிக்கையில் அந்த வங்கியை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஏல விண்ணப்பங்களை ஒன்றிய அரசு ஜூலை மாத இறுதியில் கோர அதிக வாய்ப்புள்ளது.

அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடி யத்தின் பெயரை மீண்டும் சா்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என மாற்றர் கோரி ‘சர்தார் சன்மான் சங்கல்ப் அந்தோலன் சமிதி’ என்ற பட்டிதார் சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தனா். இந்நிலையில், பட்டிதார் சமூக தலைவா் 50 பேரை  காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ஆசியாவில், மிகப்பெரிய தந்தங்களுடைய யானை களில் ஒன்றாக கருதப் படும் போகேஷ்வரா என பெயரிடப்பட்ட யானை, கர்நாடக வனப்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. 

தாங்கள் விளம்பரப்படுத் தும் பொருளுடன் உள்ள வா்த்தக தொடர்பை பிர பலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் வெளிப்படுத்த வேண் டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.