கெவடியா, ஆக.19- 19வது கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் சனிக்கிழமை குஜராத் மாநிலம், கெவடியாவில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்கு வரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் சார்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலை கள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசுகையில், தமிழ்நாடு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயி லுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறை முகத் துறையை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. தமிழ் நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதில் ஒரு செயலூக் கமான மற்றும் தாராளமான அணு குமுறையை கொண்டுள்ளது. இந்தியாவை சர்வதேச அள வில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு துவங்கவுள்ள முதன்மையான படகுச் சேவைக்கு வெளியுறவு அமைச் சகம் பச்சைக்கொடி காட்டி யுள்ளது. முன்னெடுக்கப்பட் டுள்ள சர்வதேச பயணிகள் படகு சேவையானது நீண்டகாலமாக பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஆழமான கலாச்சார உறவு களைக் கொண்ட இவ்விரு நாடுகளுக்கும் பயனளிக்கும்.
இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தை யும் மேம்படுத்தும். கூடிய விரை வில் பலன் கிடைக்கும் வகையில், இப்படகு சேவையை விரை வில் தொடங்குவதற்கு நாகப்பட்டி னம் துறைமுகம் தயாராகி வருகிறது. இராமமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப் பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. 1980 ஆம் ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்த இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும் என தெரிவித்தார்கள். நீண்ட கடற்கரையை பயன் படுத்தி கடலோர சுற்றுலா, பொழுதுபோக்கு கடல்நீர் விளையாட்டுகளை வழங்கு வதன் மூலம் நீல பொருளா தாரத்தை உயர்த்துவதற்கான ஆய்வுகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்கள். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதி களுக்கு தேவையான சரக்கு களை கையாளக்கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு திட்ட மிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை இத்துறை முகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் வேலு தெரிவித்தார்.