states

காமராசர் பல்கலை. பேராசிரியருக்கு எதிராக மேல் முறையீடு செய்திடுக!

காவல்துறைக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை, ஏப்.20- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது  செய்யப்பட்ட காமராசர் பல்கலைக்  கழக பேராசிரியருக்கு உடனே வழங்  கிய பிணைக்கு எதிராக காவல்துறை  மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் உளவியல் துறையில்  முதுநிலை படிக்கும் மாணவி களுக்கு, துறை தலைவர் பேராசி ரியர் கருப்பையா  பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்  துள்ளது. இந்நிலையில் ஒரு மாணவி காவல்துறைக்கு அளித்த புகார் அடிப்படையில் கருப்பையா கைது  செய்யப்பட்டு,  உடனே  பிணையில்   வெளி வந்துள்ளார்.  இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளித்திருக்கிறார். அந்த அடிப்படையில்  மதுரை மாந கர், புறநகர் மாவட்டக்குழுக்கள் உட னடியாக பிரச்சனையில் பாதிக்கப்  பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வலு வான தலையீட்டை செய்து வரு கின்றன.  எனினும் குற்றவாளிக்கு நீதி மன்றம் உடனே  பிணை வழங்கியுள்  ளது கவலைக்குரியது.     தமிழகத்தில் பள்ளி, கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் மாணவி கள் மீதான இத்தகைய பாலியல்  துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ச் சியாக நடைபெற்று வருவது அதிர்ச்சி   அளிக்கக் கூடியதாக உள்ளது.  கருப்பையாவின் பிணையை உட னடியாக ரத்து செய்ய  காவல் துறை மேல் முறையீடு செய்ய வேண்டும்.  

மேலும், பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள   உள்புகார் குழு வின் தலைவர், குற்றம் சாட்டப்பட்ட வரை விட பணித் தகுதி அடிப்படை யில் ஜுனியர். இது சட்டத்துக்கு முர ணானது. உள்புகார் குழு  மாற்றி அமைக்கப்பட்டு, பெண்கள் பிரச்ச னைகளில் அக்கறை கொண்டவர் கள் அல்லது பாலியல் துன்புறுத் தல் பிரச்சனைகளை கையாண்டு அனுபவம் உள்ளவர்கள் உறுப்பி னர்களாக இருப்பதை உறுதி செய்ய  வேண்டும். சுதந்திரமாக  அக்குழு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பாதிக்  கப்பட்ட மாணவிகளுக்கு உளவி யல் ஆற்றுப்படுத்தல் கிடைப்பதற்கு  உதவி செய்ய வேண்டும். பல்க லைக்கழக வளாகத்தில் பிரதான இடங்களில் இப்படி உள்புகார் குழு  இருக்கிறது. அதனுடைய உறுப்பி னர்கள் யார், யார் என்ற விவரங்கள் வைக்கப்பட வேண்டும். கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்  லாத ஊழியர்கள், மாணவ மாணவி கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த சட்டம் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.  தொடரும் இத்தகைய பள்ளி,  கல்லூரி, பல்கலைக்கழக வளா கங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.