states

காவிரி தொடர்பான தனித் தீர்மானம்: பாஜக எதிர்ப்பு

 சென்னை,அக்.9 காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணை யத்தின் உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தர விடக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.  அதன் மீது விவாதம் நடை பெற்றது. அப்பொழுது பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனி வாசன், காவிரி விவகாரத்தில் அரசு நிறைவேற்றும் தனி தீர் மானத்தில் உள்ள சில வரிக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, இந்த தீர்மா னத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா உங்கள் கட்சி யின் நிலை என்ன?என்பதைத் தெளிவாக தெரிவியுங்கள் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் திசை திருப்பும் நோக்கில் பேசிக்கொண்டி ருந்தார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், இங்கு பேசும் பாஜக உறுப்பினர் மட்டு மல்ல அந்த கட்சியின் தலைமை யும் “ போகாத ஊருக்கு வழி காட்டிக்கொண்டிருக்கிறது”என்றார். தொடர்ந்து பேசிய வானதி, “முதல்வர் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம் முழுமையான தீர்வை நோக்கியதாக இல்லை” என எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வர வேற்று ஆதரித்த நிலையில், சட்டப்பேரவையில் பாஜக வெளியேறிய தன் மூலம் தமிழ்நாட் டுக்கும் தமிழ் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிரான கட்சி  பாஜக என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டது.