திருவனந்தபுரம், அக். 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினருமான ஆனந்தல வட்டம் ஆனந்தன் (வயது 86) காலமானார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சிஐடியுவின் மாநிலத் தலைவராக செயல்பட்ட வர். 1985இல் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரா னார். ஆற்றிங்கல் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏ ஆனார். 2008இல் மாநில செயற்குழு உறுப்பினரானார். சிஐடியுவின் தேசிய துணைத் தலைவராகவும், கயிறு வாரியத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். இவருக்கு லைலா என்கிற மனைவியும், ஜீவா ஆனந்தன், மகேஷ் ஆனந்தன் ஆகிய மகன்களும் உள்ளனர்.