states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில்  அண்ணாமலை போட்டியிட தயாரா?

நடிகை காயத்ரி சவால்

சென்னை, ஜன.16-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்  தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடப்போவதாக காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.  பாஜகவில் பெண்களுக்கு எதிராக  குற்றங்கள் நடப்பதாகவும், அவர்களை  வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாக வும், முக்கிய தலைவர்களின் ஆபாச வீடி யோக்கள், ஆடியோக்களை வைத்து பெயரைக் கெடுப்பதாகவும் மாநில தலைமை மீது கருத்தை பதிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் அண்மையில் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்  யப்பட்டு, பின்னர் அனைத்து கட்சிப் பொறுப்புகளி லிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாக, பாஜகவின் மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் ஜன.13-ஆம் தேதி அறிவித்தார்.  இந்நிலையில், திங்களன்று டுவிட்டரில் காயத்ரி ரகுராம், ‘‘ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான்  உங்களை எதிர்த்து நிற்பேன். உங்கள் நாடகம் மற்றும் போலி  விளம்பரங்கள் தில்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வ ராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்  நாட்டின் மகள், நீங்க தமிழகத்தின் மகன்.  தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்’’ என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் தடையால் படிப்பை கைவிட்ட மாணவிகள்

பெங்களூரு, ஜன.16- கர்நாடகாவில் கல்வி நிறு வனங்களில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதை, அடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் படிப்பை பாதி யில் நிறுத்தி விட்டதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக் கின்றன. சிவில் உரிமைகளுக் கான மக்கள் சங்கத்தின்  (பியுசிஎல்) - கர்நாடகப் பிரி வின் அறிக்கை இத்தகவலை தெரிவித்துள்ளது. ஹிஜாப் மீதான தடை, முஸ்லிம் பெண்களின் கல்வி உரிமை யைத் தடுத்தது மட்டுமின்றி, வெறுப்பு மற்றும் குரோதச் சூழலை உருவாக்கியது என்  றும் அந்த அறிக்கை கூறுகிறது. கர்நாடகாவின் ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிமோகா மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களில் பியுசிஎல் ஆய்வு நடத்தியது. சில நிறு வனங்களில் ஆசிரியர்களும்  வகுப்பு மாணவர்களும் முஸ் லிம் பெண்களை அவமதித்த னர். ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டனர். இந்த அறிக்கையின்படி, பல மாண வர்கள் கல்வி நிறுவனங் களை மாற்றியுள்ளனர்.

நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் 

சென்னை,ஜன.16- வருகிற 18 ஆம் தேதி பள்ளிக ளுக்கு விடுமுறை இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி களுக்கு 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் 18 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ள்ளதாக தகவல் பரவியது. ஆனால், அது உண்மையில்லை என்றும் அன்றைய தினம் வழக்கம்போல் பள்ளிகள் செயல்ப டும் என்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முற்றுப்புள்ளி வைத்தார்.

புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி,ஜன.16- சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் திருவள்ளு வருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது.   அதன்படி, திருவள்ளுவர் சிலை  பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன்மாதம் 6 ஆம் தேதி தொடங்கி யது. அப்போது சிலையின் இணைப்பு பகுதிகளிலுள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக் காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடை பெற்றது.  அதன் பிறகு காகிதக் கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “வாக்கர்” எனப்படும் ரசாயனக் கலவை பூசப்பட்டது.  தற்போது ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது. இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு இன்னும் ஒரு சில நாட்களில் திரு வள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து இயக்கப்படுகிறது.  இதையடுத்து மீண்டும் திரு வள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்படுவார்கள். இதற்காக திரு வள்ளுவர் சிலை வளாகம் சுத்தப்படுத் தப்பட்டு வருகிறது.

திருச்சி-சார்ஜா விமானம் ரத்து

திருச்சி,ஜன.16- திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமா னங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப் பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட்,  ஓமன், துபாய், இலங்கை, சார்ஜா  உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமா னங்களை இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், மலிந்தோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன.  இதற்கிடையே திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு திங்களன்று(ஜன.16) காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 184 பயணி களுடன் புறப்படுவதற்கு தயாரான போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து உடன டியாக இறக்கி விடப்பட்டனர்.  அதனைத் தொடர்ந்து 11.30 மணிக்கு துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை சார்ஜாவிற்கு அனுப்பும் வகையில் மாற்று விமானமாக ஏற்பாடு செய்து பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிய உச்சத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி

சென்னை, ஜன.16- தமிழ்நாட்டின் கால நிலை சூரிய ஒளி மின் உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. இதன்படி, பெரும்பாலான தனியார் நிறுவனங்களால் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 17,000 மெகா வாட் மின்சாரம் தேவையாக உள்ளது.  கடந்த ஆண்டு செப்.3 ஆம் தேதி கணக்கீட்டின் படி, சூரிய மின் உற்பத்தி 3,658 மெகாவாட் இருந்தது. தற் போதைய சூரிய மின் உற்பத்தி தொடர்பான புதிய  தகவலை அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்ட ரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக் கிழமை (ஜன.15) சூரிய ஒளி மூலம் 4666 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு ள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் தெரி வித்துள்ளார்.

உலகச் செய்திகள்

மங்கோலியாவிற்கு 2022 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 400 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.  கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை, கடந்த ஆண்டில் மீட்சி கண்டதாக மங்கோலியாவின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெறும் 33 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே மங்கோலியாவிற்கு வந்தனர். 34 நாடுகளில் இருந்து வரும்  பயணிகள் 30 நாட்கள் வரையில் விசா இல்லாமல் தங்குவதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 22 ஆம் தேதியன்று வியட்நாமின் புத்தாண்டு தொடங்குகிறது. இதையொட்டி நாட்டின் 30 இடங்களில் வான வேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். வழக்கம் போலவே அன்று தேசிய விடுமுறை விடப்படும். 15 நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த வாணவேடிக்கைகளுக்கு வர்த்தக நிறுவனங்களும், பல்வேறு அமைப்புகளும் நிதி வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தங்க உற்பத்தியில் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே புதிய  சாதனையைப் படைத்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் 35.38 டன் தங்கம் உற்பத்தியாகியுள்ளது. புதிய சுரங்கத் திட்டங்கள், குறித்த நேரத்தில் கட்டணங்கள் மற்றும் சுரங்கக்காரர்களுக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்கியது இந்த சாதனைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட 19.5 விழுக்காடு அதிக உற்பத்தி என்பது ஏற்றுமதியையும் அதிகப்படுத்தி யிருக்கிறது.