states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கற்களை வீசி தாக்குதல்: பாஜக எம்.பிக்கு சிறை!

உத்தரப்பிரதேசத்தில் 2009-ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரிகள் மீது  கற்களை வீசிய வழக்கில் பாஜக எம்.பி. ஆர்.கே. சிங் படேலுக்கு ஓராண்டு  சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 19 பேர் குற்றவாளிகள் என சித்ரகூட் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்ப ளித்துள்ளார். இதன்படி ஆர்.கே. சிங் படேல் மற்றும் 15 பேருக்கு 1 ஆண்டு  சிறைத்தண்டனையும், 3 பேருக்கு 1 மாத சிறை தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளது.

பதவி விலகிய குஜராத் அமைச்சர் காங்கிரசில் சேர்ந்தார்

குஜராத்தில் அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, பாஜக விலிருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் (75) திங்களன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பாஜக-வில் இருந்து  விலகுவதாக கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அறிவித்த ஜெய்நாராயண் வியாஸ், ‘குஜராத்தில் சித்பூர் தொகுதியில் போட்டியிட அரசியல் செய்கிறார்கள். தலைவர்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு இலக்காக வைக்கிறார்கள். எனவே, பாஜக-வில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே முன்னிலையில், ஜெய்நாராயண் வியாஸ் தனது மகன் சமீர் வியாஸுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ரூ.1000 கோடி செலவிட்ட பாஜக!

“பாஜக என் மீதான மக்களின் நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்ற  நோக்கத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் செலவ ழித்து உள்ளது. அவர்கள் என்னை பற்றிய ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால், அது எனக்கு நன்மையே. ஏனெனில், என்னிடம் உண்மை உள்ளது. என் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள், நான் சரியான திசையில் செல்கிறேன் என்று எனக்கு எடுத்துக் கூறுகிறது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்தூரில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தோல்விபயம்: மோடி குஜராத்தை சுற்றுகிறார்!

“எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற அவரது  (மோடி) பெயர் போதாதா? பிரதமர் மோடியின் பெயரே போதுமானதாக இருக்கும் போது, அவர் மீண்டும் மீண்டும் குஜராத்துக்கு (தேர்தல் பிரச்சா ரத்துக்கு) வர வேண்டிய அவசியம் என்ன? ஏனென்றால் பாஜக இப்போது பயந்து  விட்டது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். 

‘2 குழந்தைக்கு மேல் பெற்றால் வாக்குரிமை பறிப்பு’

‘‘சீனா ‘ஒரு குழந்தை கொள்கை’யை அமல்படுத்தியது. அதன்மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, இன்று வளர்ச்சியை அடைந்துள்ளது. சீனா வில் ஒரு நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கும்போது, இந்தியாவில் ஒரு நிமி டத்திற்கு 30 குழந்தைகள் பிறந்தால், நாம் எப்படி சீனாவுடன் போட்டியிடு வோம். இந்த மசோதா மதம் அல்லது பிரிவு பாராமல் அனைவர் மீதும் செயல் படுத்தப்பட வேண்டும். அதேபோல் பின்பற்றாதவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படக்கூடாது. அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும்’’ என்று ஒன்றிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.

அமித்ஷாவுக்கு ஒவைசி பதிலடி

“2002-இல் குஜராத்தில் கலவரம் செய்தவர்களுக்கு பாடம் கற் பித்ததாகவும், மாநிலத்தில் நிரந்தர அமைதியை பாஜக ஏற்படுத்தியதாகவும் அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். நான் அமித்  ஷா-வுக்கு சொல்ல விரும்புகிறேன், 2002-இல் நீங்கள் கற்பித்த பாடம், பில்கிஸின் பலாத்கார குற்றவாளிகளை விடுவிப்பீர்கள்.. பில்கிஸின் மூன்று வயது மகளின் கொலைக்காரர்களை விடுவிப்பீர்கள் என்பதே ஆகும். இஷான் ஜாப்ரி கொல்லப்படலாம் என்பதையும் நீங்களே எங்களுக்கு கற்றுக் கொடுத்தீர்  கள். அமித் ஷா உங்களின் எத்தனை பாடங்களை நாங்கள் நினைவில் கொள்  வது? ஆனால் நினைவில் கொள்ளுங்கள்.. அதிகாரம் ஒருவரிடமே இருக்காது” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஜப்பான் நிறுவனம்   ரூ.225 கோடி முதலீடு

சென்னை,நவ.28-   சென்னையை தளமாகக் கொண்ட ஷிபௌரா மெஷின் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஜப்பானின் ஷிபௌரா மெஷினின் துணை நிறுவன மாகும். இது உலகிலேயே உயர் துல்லிய மோல்டிங் இயந்திரத்தை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது, அதன் உற்பத் தியை விரிவுபடுத்துவதற்காக இந்தி யாவில் ரூ.225 கோடி முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளது.  இந்நிறுவனம் சென்னை செம்பரம்பாக்கத்தில்  ஆண்டுக்கு சுமார் 1200 இன்ஜெக்ஷன் மோல்டிங் மெஷின் களையும் அதன் துணை உபகரணங் களையும் தயாரிக்கும் உலகத்தரம் வாய்ந்த வசதியைக் கொண்டுள்ளது.  பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டா டும் வகையில், நிறுவனம் சமீபத்தில் ஒரு  புதிய உற்பத்தி பிரிவை உருவாக்க  அடிக்கல்  நாட்டியுள்ளது.  செம்பரம்பாக்கத்தில் உள்ள  ஆலைக்கு அருகில் அமைக்கப்படும்  புதிய  தொழிற்சாலையில் அடுத்தாண்டு நவம்பர் குள் சோதனை உற்பத்தி  தொடங் கும் என குழுமத்தின் தலைவர் ஷிகெடோ மோ சகாமோடோ கூறினார். முழு உற்பத்தி தொடங்கும்போது ஏராளமா னோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமம்: மயங்கி விழுந்து  ஒருவர் பலி

சென்னை,நவ.28-  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்களில் அழைத்துச்செல்லப்பட்ட பயணி ஒருவர் வீடு திரும்புகையில் மார டைப்பால் பலியானார். ஞாயிறன்று காலை  காசியில் இருந்து பாடலிபுத்ரா ரயிலில் 216 பயணிகள் சென்னை  சென்ட்ரல் வந்து சேர்த்தனர். மாலையில் எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர்கள் திருநெல்வேலி செல்வ தற்கு காத்திருந்தனர். அப்போது திரு நெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த செல்வகுமார் (54) என்பவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர் உடன டியாக பெரும்பாக்கத்தில் உள்ள தம்பிக்கு போன் செய்து வரச்சொல்லி இருக்கி றார். அவர் வந்து சேருவதற்குள் செல்வ குமார் மயங்கி கீழே விழுந்தார். உடன டியாக அவரை அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில்   பரிசோதித்ததில் அவர் மார டைப்பால் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

எந்த கூட்டணியிலும் இல்லை அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை, நவ. 28- தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றிருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டி யிட்டது. இந்நிலையில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறு கையில், தற்போது பாமக எந்த கூட்டணியிலும் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து தான் போட்டியிட்டோம். கூட்டணி பற்றி மக்களவை தேர்தலின்போது முடிவெடுக்கப்படும். எங்களுடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தலை மையில் கூட்டணி ஆட்சி அமைப் பதுதான். அதற்கு ஏற்ற உத்தி களையும், வியூகங்களையும் மக்க ளவை தேர்தலின்போது எடுப் போம் என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்

சென்னை,நவ.28-  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்கத்தின் தேர்தல் ஜனவரி 9 ஆம் தேதி  நடைபெறவுள்ளது. தலைவர், துணைத்தலைவர், செய லாளர், பொருளாளர், நூலகர் மற்றும் 6  மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் பத விக்கான  பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. தலைவர்  பதவிக்கு தற்போதைய தலைவரும் பார் கவுன்சில் உறுப்பினருமான  ஜி.மோகன கிருஷ்ணன், முன்னாள் தலைவரும் தற் போதைய பார்கவுன்சில் உறுப்பின ருமான ஆர்.சி.பால்கனகராஜ், முன் னாள் செயலாளரும் தற்போதைய பார்கவுன்சில்  உறுப்பினருமான எம்.வேல்முருகன், சத்தியபால், ராஜ சேகர், ஏ.மோகன்தாஸ்  உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.  இதையடுத்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எந்த தேர்தலிலும் இல்லாத  அளவில் இந்த தேர்தலில் ஏராளமானோர் போட்டி யிடுவது குறிப்பிடத்தக்கது.

5 ஆயிரம் பேரைக் காப்பாற்றுங்கள்: ஏமன் கோரிக்கை

சனா, நவ.28- சிறுநீரகம் செயலிழந்த நிலையில் போராடிக் கொண்டிருக்கும் 5 ஆயிரம் நோயாளிகளைக் காப்பாற்றுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏமன் கோரிக்கை வைத்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் தாக்குதல்களால் ஏமன் நிலைகுலைந்து போயுள்ளது. மருத்துவமனைகள் சிகிச்சைக்கான வசதிகள் இன்றிக் காணப்படுகின்றன. அத்தியாவசியமான மருந்துகளுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. உடனடியாகத் தலையிட்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏமன் அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏமன் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘எந்தவிதமான மருந்துகளையோ அல்லது மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவக் கருவிகளையோ இறக்குமதி செய்ய சவூதி அரேபியா அனுமதிப்பதில்லை. கடுமையான நெருக்கடியை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்நிலையில், சர்வதேச சமூகம் மனிதாபிமான ரீதியில் உதவி செய்ய வேண்டும்’’ என்று கோரியுள்ளார்கள். மார்ச் 2015-ஆம் ஆண்டில் ஏமன் மீதான தாக்குதலை சவூதி அரேபியா தொடங்கியது. அங்குள்ள எண்ணெய் வளங்களைக் குறிவைத்தே தாக்குதல்கள் நடந்தன. அமெரிக்காவின் முழு ஆதரவுடன் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களில் சில அரபு நாடுகளும் சவூதி அரேபியாவின் பக்கம் நிற்கின்றன. ஐ.நா.வின் தலையீட்டால் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்தக் காலத்திலும் சவூதி அரேபியா தனது தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளவில்லை.

ஒரே மாதத்தில் மூன்று ஜப்பானிய அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார்கள். பெரும் ஊழல் முறைகேடுக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்ட உள்துறை அமைச்சர் டெராடா மினோரு தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கருத்துக் கணிப்பில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் பதவி விலக வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருந்தனர்.

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலியர்களின் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை 198 பாலஸ்தீன மற்றும் சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்த கோரிக்கையை நீதிமன்றம் முன்வைத்த ஆர்வலர்கள் கரீம் கான் மற்றும் சில்வியா பெர்னாண்டஸ் ஆகியோர் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, இஸ்ரேல் எடுத்துள்ள பல்வேறு முடிவுகளை திரும்பப்பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

வெனிசுலாவின் எதிர்க்கட்சிகளோடு அந்நாட்டு அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட போட்டி அரசுக்கு மக்களின் ஆதரவு இல்லாததால் பல எதிர்க்கட்சிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. மெக்சிகோ அரசின் உதவியுடன் அந்நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சில கட்சிகளுடன் உடன்பாடும் எட்டப்பட்டு கையெழுத்தாகியுள்ளது.





 

 

;